பிக் பாஸ் 8: சீரியல் ஜோடி முதல் நடிகர் பார்த்திபன் வரை.. லீக்கான புது போட்டியாளர்களின் லிஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற புதிய உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் விஜய் டிவி சீரியல் ஜோடி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர், மற்றும் பிரபல நடிகர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாக இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வமான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரசிகர்கள் எதிர்பார்த்ததுபடியே விஜய் சேதுபதியே தொகுப்பாளராக வந்திருக்கிறார். அதே நேரத்தில் இந்த சீசனில் நிகழ்ச்சி பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக போட்டியாளர்கள் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து இருந்தாலும் இதுவரைக்கும் தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இந்த எட்டாவது சீசனில் இல்லை என்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதை போக்கும் விதத்தில் பல சுவாரசியமான டாஸ்குகள் இந்த சீசனில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் வரும் அக்டோபர் மாதத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படும். அதற்கான ஆயத்த பணிகள் வேகமாக ரெடியாகி கொண்டிருக்கிறது. டிஆர்பி விஷயத்தில் தாக்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் பல முயற்சிகள் சேனல் தரப்பில் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒரு சில போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது.
அதோடு இப்போது லேட்டஸ்டாக சிலருடைய பெயரும் அடிபடுகிறது. அதில் விஜய் டிவியில் அதிகமான சர்ச்சைகளால் பிரபலமடைந்த சீரியல் ஜோடி கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த பவித்ரா மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்த வினோத் பாபு இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

சீரியல் ஜோடி: ஏற்கனவே பவித்ரா ஜனனி பல சீரியல்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் ஈரமான ரோஜாவே சீரியல் மூலமாகத்தான் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த சீரியல் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதை தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் சீரியல் முன்பு ப்ரோமோ வெளியானதுமே பெரிய பஞ்சாயத்து தொடங்கிவிட்டது.
அதில் கதாநாயகன் வினோத் பாபு இன்னொருவருக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பதை கதாநாயகி தடுப்பதால் கதாநாயகன் கதாநாயகி கழுத்தில் தாலி கட்டி விடுவார். வெளிநாட்டில் படித்து பெண்ணியம் பேசிய கதாநாயகி தாலி கட்டி விட்டார் என்பதற்காக கதாநாயகன் வீட்டிற்கே வந்து வாழ்ந்து வருவார். இதுதான் ப்ரோமோவில் காட்டப்பட்டது. இது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது.
அதிலும் நாம் தமிழர் கட்சியோடு தற்போது மோதி வருண் குமார் ஐபிஎஸ் இந்த ப்ரோமோவை பார்த்து கண்டித்து இருந்தார். இந்த ஜோடி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

பார்த்திபன்: அவர்களைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத ஒரு பிரபலம் என்றால் அது நடிகர் பார்த்திபன் தான். நடிகர் பார்த்திபன் பேச்சுக்கள் எப்போதுமே புரியாத புதிராகவே இருக்கும். அவருடைய நக்கல் கலந்த பேச்சு அவருக்கு தனி அடையாளமாக இருந்தாலும் அவர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகியதும் யார் தொகுப்பாளராக வரலாம் என்று ரசிகர்கள் கருத்துகளில் பார்த்திபன் பெயரும் அடிபட்டது.
ஆனால் விஜய் சேதுபதி தொகுப்பாளராக தேர்வு செய்யப்பட்டதும் பார்த்திபன் போட்டியாளராக போகிறார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பார்த்திபன் இயக்குனராகவும் நடிகராகவும் பலருக்கும் பரீட்சையமானவர்தான். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்பது ஊர் அறிந்தது தான். ஒவ்வொரு சீசனிலும் வயதில் மூத்த போட்டியாளர்கள் கலந்து கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வரிசையில் பார்த்திபன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் விசித்திரா வயது மூத்தவராக கலந்து கொண்டு இருந்தாலும் அவர் அதிக நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் தாக்கு பிடித்திருந்தார். அவரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் வந்த வேகத்திலேயே வெளியேறி இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருக்கும்போது அவரை விட வயதிலும் அனுபவத்திலும் மூத்த பார்த்திபன் போட்டியாளராக வருவதை பார்த்திபன் எப்படி ஓகே செய்தார் என்று தான் புரியவில்லை.

மாதம்பட்டி ரங்கராஜன்: அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. மாதம் பட்டி ரங்கராஜன் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சமையல் மூலமாகவே பெரிய அளவில் பிரபலம் ஆகி இருக்கிறார்.
அதன் மூலமாகவே அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியிருக்கிறது இதில் மாதம்பட்டி ரங்கராஜன் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
இவர்களைப் போல வேறு எந்த பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று நீங்க நினைக்கிறீங்க? உங்க கருத்தை தட்டி விடுங்க பாஸ்.












Click it and Unblock the Notifications