பிக்பாஸில் வாய் விட்ட ஜெஃப்ரி.. "அமுக்கட்டுமா", எதுக்கு அட்வான்டேஜ் எடுக்க விடறீங்க".. Bigg Boss 8

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் வீட்டில் கானா பாடகர் ஜெஃப்ரி, தன்னுடைய விளையாட்டை துவங்கியிருக்கிறார்.. ஆனால், இவர் பேசுவது, செய்வது எல்லாமே ஏடாகூடமாக இருக்கிறதே? தெரிந்துதான் பேசுறாரா? வேண்டுமென்றே பேசுகிறாரா? என்ற சந்தேகத்தையும் ரசிகர்களிடம் ஏற்படுத்தி வருகிறார் ஜெஃப்ரி.. என்ன நடந்தது?

கானா பாடகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும், கானா பாடகர்கள் போட்டியாளர்களாக அறிமுகப்படுத்தி வருகிறது பிக்பாஸ்.

bigg boss 8 tamil jeffry gana singer feffry 8

தாயின் அரவணைப்பு: அந்தவகையில், பிக் பாஸ் 8வது சீசனில் ராப் பாடகராக போட்டியாளராக வந்துள்ளவர் ஜெஃப்ரி... தன்னுடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர்.. கானா பாடல்களின் மீது ஆர்வம் அதிகரித்து, அதையே தன்னுடைய தொழிலாக மாற்றிக் கொண்டவர்.

தானே கானா பாடல்களை எழுதி, அதை பாடக்கூடியவர்.. தன்னுடைய குடும்ப வறுமையை போக்கவும் தன்னுடைய அம்மாவை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும், அம்மாவை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவுமே, பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருப்பதாக சொன்னார் ஜெஃப்ரி..

சக போட்டியாளர்: அதற்கேற்றபடி பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே ஓரளவு விளையாடியும் வருகிறார்.. சக போட்டியாளர்களிடம் நெருங்கி பழகியும் வருகிறார்.. ஆனால், நேற்றை தினம், தன்னுடைய காதலை வெகுளித்தனமாக சொல்லி பலரையும் கவனிக்க செய்தார்.. "12 வயசுல இருந்து 6 வருஷமா ஒரு மலையாளப் பெண்ணை காதலிச்சேன். ஆனா அவ என்கிட்ட போன் இல்லாத காரணத்தினால் பிரேக் அப் பண்ணிட்டா" என்றார்.

ஆனால், பிக் பாஸில் நேற்று நடந்த ஆண்களா? பெண்களா? என்று விவாதத்தில், ஜெஃப்ரி பேசியது சர்ச்சையை கிளப்பிவிட்டுவிட்டது.. "சிங்கிள் மதராக இருக்கும் பெண்களிடம் அட்வான்டேஜ் எடுத்துக்கிறாங்க" என பெண்கள் அணியினர் சொல்லவும், உடனே ஜெஃப்ரி, "நீங்கள் எதுக்கு அட்வான்டேஜ் எடுக்க விடுறீங்க" என்று கேட்டார்.

சுனிதா கண்டிப்பு: இதைக்கேட்டதுமே, பெண் அணியிலிருந்த சுனிதா, ஜாக்குலின் இருவருமே கொந்தளித்து விட்டார்கள்.. ஜெஃப்ரியை தனியாக அழைத்து, "இது ரொம்ப தப்பு.. இப்படி பேசாதே.. நீ இப்ப விட்ட வார்த்தை ரொம்ப தப்பு.. இனி அப்படி பேசாதே" என்று எச்சரித்தனர்....

ஜெஃப்ரி பேசிய இதே கருத்தைதான், ரவீந்தரும், முத்துக்குமாரும் கார்டன் ஏரியாவில் பேசினார்கள்.. "எந்த மடையனாவது இப்படி பேசுவானா?" என்று ரவீந்தர் சொல்ல, அதற்கு முத்துக்குமார் "அவன் அப்படி பேசியதால்தான் நாங்கள் குறுக்கே புகுந்து அவன் பேசுவதை நிறுத்தி விட்டோம்" என்று பதிலளித்தார்.

உடனே ரவீந்தர் சிரித்துக்கொண்டே, "என்ன பேசுறதுன்னு தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறான்" என்று கிண்டலாக சொன்னார். அதற்கு முத்துக்குமார், "பாவம்ண்ணே.. அவனுக்கு எதுவும் தெரியல" என்று சிரித்து கொண்டே சொன்னார்..

கண்ணாமூச்சி: அதேபோல, பிக் பாஸ் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடும்போது சௌந்தர்யா திடீரென கீழே விழுந்துவிட்டார்.. உடனே அவரிடம், "அமுக்கட்டா" என்று ஜெஃப்ரி பேசிக்கொண்டே அருகில் நெருங்கி சென்றார்.. இதைப்பார்த்ததுமே இணையவாசிகள் பதறிப்போய்விட்டார்கள்..

என்ன வார்த்தை பேசுறதுன்னுகூட தெரியாமல் பேசுறாரே? கொஞ்சம் கொஞ்சமாக அசல் கோளாறு போல ஜெஃப்ரி மாற ஆரம்பிச்சிட்டாரா? என்று ரசிகர்கள் சிலர் கேள்விகளை எழுப்ப துவங்கிவிட்டார்கள்.. இந்த வீடியோதான் இணையத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே ஜெஃப்ரி தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும், இப்படியெல்லாம் "லூஸ் டாக்" செய்து கொண்டிருந்தால், தன்னுடைய தாயின் கனவை நிறைவேற்ற முடியாது என்று அட்வைஸ் தந்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

ஜாக்குலினிடம் "அக்கா அக்கா" என்று அழைத்து பேசினாலும், உடனடியாக டீமை மாற்றி விளையாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.. ஆர்வக் கோளாறுகளை அவ்வப்போது வெளிக்காட்டிக் கொள்ளாமல், சிலசமயங்களில் வாய் திறக்காமல் ஒதுங்கி விளையாடவும் கற்று கொள்ள வேண்டும் என்று இலவச அறிவுரைகளை ரசிகர்கள் தந்து கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+