சிடு சிடுன்னு ஜாக்குலின்.. பிக்பாஸ் வீட்டில் "முகமூடி" நிஜமா? விடாமல் விரட்டும் சுனிதா: Bigg Boss 8
சென்னை: பிக்பாஸ் வீட்டில் ஜாக்குலினின் புதிய முகம் பலருக்கும் ஆச்சரியத்தையும், குழப்பத்தையும் தந்து கொண்டிருக்கிறது. அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாளராக ஜாக்குலின் உள்ள நிலையில், அவர் மீதான விமர்சனங்களும் குவிய துவங்கி உள்ளன.
பிக்பாஸ் வீட்டில், ஜாக்குலின் -சுனிதா இடையே அடிக்கடி முட்டல் - மோதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. நேற்றைய தினம் நடந்த சம்பவமும் இணையத்தில் வீடியோவாக வலம் வந்து கொண்டிருக்கிறது..

அன்ஷிதாவிடம் சுனிதா பேசும்போது, "ஜாக்குலின் கிட்ட எனக்கு என்ன பிரச்சனை தெரியுமா? அவள் பேசுறதே சண்டை போடற மாதிரி இருக்கு.. சண்டை போடறான்னு சொல்லல.. ஆனால அவள் பேச்சு, எனக்கு அப்படித்தான் தெரியுது. அதுதான் எனக்கு ஜாக்குலின்கிட்ட பிடிக்கல" என்கிறார்.
சண்டைகள்: உடனே இதற்கு பதிலளித்த அன்ஷிதா, "இப்படியெல்லாம் சண்டைகளை போட்டால் மட்டுமே, ரசிகர்களின் கவனத்தை கவர முடியும் என்று ஜாக்குலின் நினைக்கிறாரா என்னவோ? ஆனால், இப்படி அடுத்தவர்களை சண்டை போட தூண்டும் வகையில் ஜாக்குலினின் பேச்சு இருப்பது சரி கிடையாது.. இதை நானும் பலமுறை பார்த்துவிட்டேன்" என்று சுனிதாவுக்கு பதிலளிக்கிறார்.
உடனே சுனிதா, இப்படி நடந்துக்கிறதுதான் ஜாக்குலினின் நேச்சர்.. ஆனால், இது அவருக்கு எந்தவகையிலும் உதவாது" என்கிறார். இந்த வீடியோதான் புரமோவாகவும் வெளிவந்திருந்தது. ஏற்கனவே, ஜாக்குலின் Vs சுனிதா இடையில் அடிக்கடி சண்டை மூளும் நிலையில், சுனிதாவுடன் அன்ஷிதாவும் கை கோர்த்துள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது..
ஜாக்குலின்: இதுஒருபுறமிருக்க, ஜாக்குலினின் செயல்பாடுகளை இணையவாசிகளும் விமர்சிக்க துவங்கிவிட்டார்கள். பிக்பாஸ் சீசனில் ஜாக்குலின் போட்டியாளராக என்ட்ரி தந்ததிலிருந்தே, தன்மீது மொத்த கவனத்தையும் குவித்து வருகிறார்.. வீட்டின் நடுவே படுத்து தூங்கி, யாருடனும் சேராமல் தனித்து செயல்படுகிறாரோ ஜாக்குலின்? என்ற சந்தேகத்தை முதல்நாளே ஏற்படுத்தி விட்டார்.
அதேபோல சக போட்டியாளர்களின் கவனத்தையும் ஜாக்குலின் தன்னுடைய "கறார்" பேச்சு மூலம் பெற்று வருகிறார்... விஜய் டிவியில் தொகுப்பாளராக சிரித்து கொண்டே இருந்த ஜாக்குலின், பிக்பாஸ் வீட்டிற்குள் சிடுசிடுவென இருக்கிறாரே? கேமை சுவாரஸ்யமாக ஆடுவதாக நினைத்துக்கொண்டு, வேண்டுமென்றே பெண்கள் டீமின் அமைதியை கெடுக்கிறாரோ? என்றெல்லாம் இணையவாசிகள் சந்தேகத்தை கிளப்புகிறார்கள்.
சிடுசிடு முகம்: சிலசமயம், ஜாக்குலினின் கோபம் நியாயமானதே என்றும் ஆதரவு கமெண்ட்கள் வரத்தான் செய்கின்றன. குறிப்பாக, ரஞ்சித் - ரவீந்தர் இடையே நடந்த சண்டையை பார்த்து, பதறிப்போன ஜாக்குலின், இருவரையும் சமாதானம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் பலரையும் ரசிக்கவே செய்தன. ஆனால், அது பிராங்க் காமெடி என்று தெரிந்ததுமே, வெடித்து அழுத ஜாக்குலினின் உணர்வுகள் நியாயமானவையே என்கிறார்கள் இணையவாசிகள்.
இருந்தாலும், வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்தே ஜாக்குலின், யார் பேச்சையும் கேட்காமல் இருக்கிறாரே? தன் இஷ்டத்துக்கு பேசுகிறாரே? யார் என்ன கருத்து சொன்னாலும் அதை ஏற்கவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாரே? சுனிதா மீது ஏன் இவ்வளவு கோபத்தை காட்ட வேண்டும்? என்ற குழப்பங்களும் இணையவாசிகளுக்கு இருக்கவே செய்கிறது.
ஸ்டேட்டர்ஜி: அதிலும், விஜய் டிவியின் சக போட்டியாளரான சுனிதாவுக்கும், ஜாக்குலினுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருப்பதும் பலரது கவனத்தை பெற்று வருகிறது. ஒருவேளை இதுதான் ஜாக்குலினின் உண்மையான முகமா? அல்லது பிக்பாஸ் வீட்டிற்கான ஸ்டேட்டர்ஜியா? என்றும் தெரியாமல் குழம்பி உள்ளார்களாம் இணையவாசிகள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications