மேடையில் விஜய் சேதுபதி தான் அப்படி பேச சொன்னாரு! ஆனால் அங்கு நடந்தது வேறு! அர்னவ் சொன்ன ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இரண்டாவது பாடத்தில் அர்னவ் வெளியேறி இருந்தார். அப்போது மேடையில் விஜய் சேதுபதி முன்பு உள்ளிருக்கும் போட்டியாளர்களை ஜால்ராஸ் என்று திட்டியிருந்தார். அதற்கு விஜய் சேதுபதி கண்டித்தார். அது பற்றி அர்னவ் இப்போது முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி புது தொகுப்பாளராக விஜய் சேதுபதி தலைமையில் 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டது. அதில் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். இரண்டாவது வாரத்தில் அர்னவ் வெளியேற்றப்பட்டார்.

bigg boss tamil 8 bigg boss 8 8

ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு ஹலோ பிரபலமானவர்தான். அவர் விஜய் டிவியில் செல்லம்மா சீரியலில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்ததை விடவும் அவருடைய குடும்ப பிரச்சனைகளால் தான் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அவர் சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதரை காதலித்த திருமணம் செய்தது, அதற்குப் பிறகு மனைவியோடு பிரச்சனை என்று அர்னவ் பெயர் இணையத்தில் அதிகமாக அடிபட்டுக் கொண்டிருந்தது.

தனக்கு இருந்த கெட்ட பெயரை நீக்க வேண்டும் என்றுதான் அகர்னவ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனார். அங்கு பெண் போட்டியாளர்களிடமும், நிகழ்ச்சி பார்க்கும் பெண் ரசிகைகளிடமும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று அர்னவ் செய்த செயலை இவருக்கு வினையாக அமைந்தது. ஆன் போட்டியாளர்கள் தன்னை அவர்களோடு சேர்க்கவில்லை, அவருடைய கருத்திலிருந்து தான் தனித்து இருப்பதால் அவர்கள் ஒதுக்கி வைத்தார்கள் என்று அர்னவ் சொல்லியிருந்தார்.

அதிலும் எலிமினேஷன் ஆகி வெளியே வந்து விஜய் சேதுபதி முன்பு மேடையில் பேசும்போது ஆண் போட்டியாளர்களை ஜால்ரா என்றும் சொம்பு தூக்கி என்று கலாய்த்தார். அதற்கு விஜய் சேதுபதி குறுக்கிட்டு கடுமையாக பேசுவதை எல்லாம் பிக் பாஸ் வீட்டிற்குள் பேசிருக்க வேண்டும் வெளியே வந்த பிறகு இப்ப அவர்கள் என்னுடைய போட்டியாளர்கள் அவர்களை பேசக்கூடாது என்று தடுத்து இருந்தார்.

bigg boss tamil 8 bigg boss 8 8

இது இணையத்தில் அதிகமான விமர்சனங்களை சந்தித்தது. தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல்முறையாக அர்னவ் இது பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில் முதலில் விஜய் சேதுபதி தான் என்னிடம் பாலிஸ் பண்ற மாதிரி பேசாத உன் மனதில் இருப்பதை போட்டியாளர்களிடம் பேசு என்று சொன்னார்.

அவர் சொன்னதால்தான் நானும் மனசில் இருந்ததை பேசினேன். ஆனால் திடீரென்று இங்கு வந்து வன்மத்தை காட்டாத என்று சொல்லிவிட்டார். ஆனால் நான் பேசியது அவருக்கு ஏதோ தப்பா தெரிஞ்சி இருக்கு என்று நினைக்கிறேன். நான் பேசியது தவறு என்று இப்ப கூட சொல்ல மாட்டேன்.

ஏன்னா எனக்கு ஆண்கள் கொடுத்த அவார்டை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒருவேளை நான் ஞாயிற்றுக்கிழமை மட்டும் எலிமினேஷன் ஆகாமல் இருந்திருந்தால் அடுத்த வாரத்தில் என்னுடைய இன்னொரு முகத்தை அங்குள்ள போட்டியாளர்கள் பார்த்திருப்பார்கள் என்று அந்த பேட்டியில் அர்னவ் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+