பிக் பாஸ் 8: கவுண்டம்பாளையம் ரஞ்சித்துக்காக அவருடைய மனைவி வரலையே? பிரியா ராமனுடன் பிரச்சனையா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் 9வது போட்டியாளராக அறிமுகமான நடிகர் ரஞ்சித்திற்காக அவருடைய மனைவி பிரியா ராமன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை, அவருடைய நண்பர்கள் தான் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதனால் பிரியா ராமன் ரஞ்சித்தை விட்டு பிரிந்து விட்டாரா என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.
நடிகர் ரஞ்சித் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் முன்னணி நடிகராகவும் நடித்திருக்கிறார். அதோடு சில திரைப்படங்களை இயக்கி அதிலும் நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் சின்னத்திரைையிலும் சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் செந்தூரப்பூவே சீரியலுக்கு பிறகு தற்போது ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் இன்று தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக அறிமுகமாக இருக்கிறார்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஞ்சித் இயக்கி நடித்த கவுண்டம்பாளையம் என்ற திரைப்படம் பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த திரைப்படத்திற்கு பிறகு ரஞ்சித் அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். காரணம் காதல் திருமணம் செய்பவர்களை ஆவண கொலை செய்வது தவறில்லை என்று முதலில் பேசி இருந்தார். பிறகு காதல் திருமணம் செய்வதற்கு கண்டிப்பாக பெற்றோரின் சம்மதம் இருக்க வேண்டும் என்று பேசி வருகிறார். இதற்காகவே சிலர் இவரை திட்டி வருகிறார்கள்.
இப்படியான நிலையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரஞ்சித் கலந்து கொள்ளும்போது அவருடைய மனைவி பிரியா ராமன் கலந்து கொள்ளாமல் அவருடைய நண்பர்கள் மட்டும்தான் அந்த நிகழ்ச்சியில் அவருக்கு துணையாக வந்திருக்கிறார்கள். நடிகை பிரியா ராமனை ரஞ்சித் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு பிரியா ராமனை ரஞ்சித் விவாகரத்து செய்திருந்தார். அதற்கு பிறகு நடிகை ராகசுதாவை திருமணம் செய்திருந்தார். ஆனால் அந்த திருமண வாழ்க்கையும் அதிக நாட்கள் நிலைக்க வில்லை.

இரண்டாவது மனைவியையும் ரஞ்சித் விவாகரத்து செய்து இருந்தார். பிறகு சில மாதங்களில் பிரியா ராமனோடு மீண்டும் சேர்ந்திருந்தார். அந்த நேரத்தில் பிரியா ராமன் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார். அதுபோல விஜய் டிவியில் செந்தூரப்பூவே சீரியலில் ரஞ்சித் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்தார். அதே சீரியலில் ரஞ்சித்திற்கு மனைவியாக பிரியா ராமன் நடித்து வந்தார்.
அந்த நேரத்தில் பிரியா ராமன் மற்றும் ரஞ்சித் இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இருந்தனர். அதோடு தங்களுடைய காதலை புரிந்து கொண்டதாகவும் அந்த நேரத்தில் பதிவு வெளியிட்டிருந்தனர். ஆனால் சமீப காலமாக ரஞ்சித் பற்றி சர்ச்சைகளும் பரவி வரும் நிலையில் அதற்கு பிரியா ராமன் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட அவர் இன்று கலந்து கொள்ளவில்லை என்பதால் பிரியா ராமனும் ரஞ்சித்தும் பிரிந்து விட்டார்களா? என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications