Bigg Boss 8 finale தொடங்கியதும் விமர்சனத்திற்கு உள்ளாகும் ட்ரோபி.. இப்படி செஞ்சி வெச்சிருக்காங்க?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் வெற்றி பெறுபவருக்கு கொடுக்கப்படும் ட்ரோபியை விஜய் சேதுபதி அறிமுகம் செய்து இருக்கிறார். அது இணையத்தில் விமர்சனங்களை பெற்று வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைய உள்ளது. கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இணையத்தில் அதிகமான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. விஜய் சேதுபதி வார இறுதியில் போட்டியாளர்களிடம் முகத்துக்கு நேராக பேசி விடுவது ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது, சில நேரங்களில் அவர் பேசுவது கூட தவறு என்பது பலருடைய கருத்தாக இருந்தது.

அதுபோல இந்த சீசனில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டதால் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் நிகழ்ச்சி தொடங்கி 104வது நாளில் இந்த சீசனுக்கான இறுதி பினாலே இன்று நடைபெறுகிறது இதில் 5 போட்டியாளர்கள் பைனலிஸ்டாக தேர்வாகி இருக்கிறார்கள்.
இதில் யார் வெற்றியாளராக போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. ஆனால் நேற்றே இந்த சீசனின் டைட்டில் வின்னர் முத்துக்குமாரன்தான் என்ற தகவல்கள் வெளியாகி விட்டனர். அதுபோல இன்று வெளியான தகவலின்படி ரன்னராக சௌந்தர்யாகவும், இரண்டாவது ரன்னர் அப் ஆக விஜே விஷாலும் செலக்ட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி தொடங்கியதும் பிக் பாஸ் மேடைக்கு வந்த விஜய் சேதுபதி இந்த சீசனின் ஹீரோ யார் தெரியுமா என்று மக்களிடம் கேட்டிருந்தார். அதற்கு ரசிகர்கள் எல்லோரும் நீங்கதான் என்று சொல்லி இருந்தனர். அதற்கு விஜய் சேதுபதி இல்லை இந்த டிரோபி தான் ஹீரோ.. இதை வாங்குவதற்காக தானே இத்தனை நாட்கள் இவர்கள் எல்லோரும் போராடினார்கள். அதனால் இந்த ட்ரோபியை இப்போ அறிமுகப்படுத்துகிறேன் என்று இந்த சீசனில் டிரோபி அறிமுகப்படுத்தியிருந்தார்.
அதை பார்த்ததும் இணையத்தில் அதிகமாக ட்ரோல்கள் வருகிறது. அந்த டிரோபி பார்ப்பதற்கு மார்பல் கல்லில் செய்யப்பட்டது போல இருக்கிறது. 104 நாட்கள் கடுமையாக போராடி வெற்றி பெற்றவர்களுக்கு இப்படி ஒரு டிரோபியா கொடுப்பாங்க என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு விஜய் சேதுபதி கொடுத்த அனுப்பிய டம்மி ட்ரோபி போலவே இப்போது பைனல் டிராஃபியும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications