இன்று நடைபெற்ற சூட்டிங்..நாளை பிக் பாஸுக்குள் நுழையும் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நாளை எபிசோட்டில் ஐந்து வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதற்கான சூட்டிங் இன்று சென்னையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அது பற்றி பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இன்று வரைக்கும் மூன்று வாரம் முடிவடைந்திருக்கும் நிலையில் இது நான்காவது வாரத்தில் இறுதி கட்டத்தில் வந்திருக்கிறது. இதில் நான்காவது வாரத்தில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

காரணம் இந்த வாரத்தில் வாக்குகளின் அடிப்படையில் கடைசி இடத்தில் சுனிதா தான் இருந்தார். அதனால் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிரீ டிக்கெட்டை வைத்து சுனிதா காப்பாற்றப்பட்டதால் அவர் இந்த வாரம் வெளியேறப் போவதில்லை.
அவருக்கு அடுத்ததாக வாக்குகள் குறைவாக பெற்று இருக்கும் அன்ஷிதா தான் இந்த வாரம் வெளியேறப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்படும் போது 18 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது வரைக்கும் மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

அதுபோல நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரம் முடிவடைந்த நிலையில் இருந்த சீசனில் வைல்ட் கார்டு எப்போது அறிமுகமாக போகிறார்கள்? யார் வைல்ட் கார்டாக வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே நாளை எபிசோட்டில் ஐந்து வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கப் போகிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது . இன்று அதற்கான சூட்டிங் நடைபெற்று இருக்கிறது. அதில் யார் என்று பார்க்கலாம்.
வர்ஷினி வெங்கட், நடிகரும் மாடலுமான ராணா பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, 2023 ஆம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த ரியா தியாகராஜன் மற்றும் விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லனாக அர்ஜுன் கேரக்டரில் நடித்து தற்போது பணிவிழும் மலர்வனம் சீரியலில் நடிக்கும் நடிகர் ரயான் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications