BB Tamil 8 grand finale: தொடங்கியது சூட்டிங்.. 4வது, 5வது இவர்களா? முதலில் வெளியேற போகும் இருவர்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நாளை ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்கள் பிடித்தவர்கள் யார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இத்தனை நாட்களும் விறுவிறுப்பாக இருந்தது. நாளை ஞாயிற்றுக்கிழமை இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே ஆறு மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த சீசன் 24 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே பைனலுக்கு தேர்வாகி இருக்கிறார்கள். அதில் முத்துக்குமரன், ராயன், பவித்ரா, சௌந்தர்யா மற்றும் விஜே விஷால் என ஐந்து பேரில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.

ஆரம்பத்தில் இந்த சீசனில் யார் டைட்டில் வின்னராக போகிறார் என்று எதிர்பார்க்க முடியாத சூழ்நிலைதான் நிலவி வந்தது. ஆனால் சில வாரங்களாகவே முத்துக்குமரன் டைட்டில் ஜெயித்தால் நன்றாக இருக்கும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின் படி முத்துக்குமார் தான் டைட்டில் ஜெயிக்கப் போவதாக கூறப்படுகிறது.

அது ஒரு பக்கம் இருந்தாலும் முதலில் டைட்டில் வின்னருக்கான சூட்டிங் நடைபெறுவது இல்லை. அதற்கு முன்பு ஐந்தாவது, அடுத்ததாக நான்காவது பிறகு மூன்று என்று பின்னால் இருந்துதான் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அதனால் தற்போது ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கடைசி இரண்டு போட்டியாளர்களாக வெளியேற்றப்படுவது ரயான் மற்றும் பவித்ரா என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தற்போது வரைக்கும் பதிவான வாக்குகளின் படி பவித்ரா மற்றும் ரயான் இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் முதலில் வெளியேற்றப்பட்டு ரயான் ஐந்தாவது போட்டியாளராகவும், பவித்ரா நான்காவது போட்டியளராகவும் தேர்வானதாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து சௌந்தர்யா, விஜே விஷால் மற்றும் முத்துக்குமரனை மட்டும் தான் பைனல் மேடைக்கு கூப்பிடப்போகிறார்களாம். அதுபோல நேற்று முன்தினம் எவிக்ஷன் ஆன ஜாக்குலினும் ஃபைனல் மேடையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications