பிக் பாஸ் வீட்டுக்குள் கடும் சண்டை.. விதிமீறல் பிரச்சனை.. ஸ்ட்ரைக் செய்த சுனிதா! பஞ்சாயத்து தொடங்கியது
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நவம்பர் 5ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோவில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இரண்டு அணியினரும் விதிமிறல் பிரச்சனையில் ஈடுபடுகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் 8வது நிகழ்ச்சியில் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் பிரிக்கப்பட்டு விளையாடி வருகிறார்கள். இதுவரைக்கும் ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் தான் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் உட்பட எல்லாமே இருக்கும். ஆனால் இந்த முறை வீட்டிற்கு நடுவே ஒரு கோடு போட்டு ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாக மோத விட்டு வருகிறார்கள்.

இதில் முதல் மூன்று வாரங்கள் பெரிய அளவில் ஆண்கள் பெண்களுக்குள் பிரச்சனைகள் ஏற்படவில்லை. ஒரே அணிகளுக்குள் தான் போட்டிகள் இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வந்த பிறகு உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு கொம்பு சீவி விடப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே பெண்கள் ஆண்களோடு ஒரு அக்ரிமெண்ட் போட்டு இருந்தார்கள். அதாவது ஆண்கள் சொல்லும் ஒரு வாரத்தில் பெண்கள் யாரும் ஆண்களை நாமினேஷன் செய்யக்கூடாது என்ற நிபந்தனைக்கு பெண்கள் தரப்பினரும் சம்மதம் சொல்லி இருந்தனர். இதை எப்படியாவது உடைக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
பெண்கள் இருக்கும் பக்கத்தை தாண்டி தான் லிவிங் ஏரியாவிற்கு ஆண்கள் செல்ல வேண்டியது இருக்கிறது. அதுபோல பிக் பாஸ் கன்ஸ்ட்ரக்ஷன் ரூம் இருக்கிறது. அந்த பக்கமாக ஆண்கள் போக வேண்டியது இருப்பதால் எங்களைத் தாண்டி போகும் போது நாங்கள் சொல்லும் டாஸ்க் செய்ய வேண்டும் என்று பெண்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இதற்கு பிக் பாஸ் மறுப்பு தெரிவித்திருக்கிறார். நான் சொல்லி லிவிங் ஏரியாவிற்கும் கன்ஸ்ட்ரஷக்சன் ஏரியாவிற்கும் ஆண்கள் வருவதை யாரும் தடை செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். இதற்கு பெண்கள் தரப்பில் பிக் பாஸ் உங்கள் அன்றாட வேலையை பார்க்கலாம் என்று சொன்ன பிறகு ஐந்து நிமிடங்களுக்கு மேலாக அந்த இடத்தில் இருந்தால் நாங்கள் டாஸ்க் கொடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இவர்களுக்குள் இந்த பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. அப்போது நாம சொல்ற விதிமுறைகளுக்கு ஆண்கள் கட்டுப்படவில்லை என்றால் நாம் அவர்களுடைய கோட்டை தாண்டி அந்த பக்கமாக இருக்கும் சமையல் அறைக்கு செல்ல முடியாது, அப்படி செல்லவில்லை என்றால் சாப்பாடு செய்ய முடியாது.
ஆண்கள் நாம சொல்ற விதிகளுக்கு கட்டுப்படவில்லை என்றால் யாரும் சாப்பாடு சமைக்க வேண்டாம். சாப்பிடவும் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். சுனிதாவின் இந்த பேச்சுக்கு உள்ளிருக்கும் ஒரு போட்டியாளர் அது எப்படி சாப்பிடாமல் இருக்க முடியும் என்று எதிர்ப்பு குரல் கொடுத்திருக்கிறார். இதனால் இந்த பிரச்சனை மேலும் பூதாகரமாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே வாய் சவடால் மட்டும் தான் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரிய அளவில் பிரச்சனை இதுவரை வெடிக்கவில்லை. இந்த பிரச்சனை பூகம்பமாக போகிறதா? இல்லை இதுவும் அமைதியாக கடந்து போகிறதா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications