பிக் பாஸ் 8: வெளியேற்றப்பட்ட சாச்சனா.. உடைந்தது கனவு.. கண் கலங்கிய ரஞ்சித்.. இப்படி ஒரு காரணமா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து முதல் போட்டியாளராக சாச்சனா வெளியேற்றப்பட்டு இருக்கிறார். 24 மணி நேரத்திற்குள் இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் ஆகி இருக்கிறார். இவருடைய எலிமினேஷன் பார்த்து நடிகர் ரஞ்சித் கண் கலங்கி அழுத்திருக்கிறார்.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரம். அது தற்போதைய எட்டாவது சீசனில் தொகுப்பாளர் மாறிய போது கூட நடந்திருக்கிறது. கமல்ஹாசன் தான் ஏழு சீசன்களாக இந்த டயலாக்கை சொல்லிக் கொண்டிருப்பார். ஆனால் இப்போது அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக கலந்து கொண்ட போது இந்த நிகழ்ச்சியில் பல எதிர்பாராத சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது.
அதில் முதலாவதாக இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரத்திற்குள் எலிமினேஷன் நடக்காத நிலையில் இந்த சீசனில் அது நடைபெற்று இருக்கிறது. நேற்று விஜய் சேதுபதி பிக் பாஸ் போட்டியாளர்களிடம் இதை சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். இன்று அவர் சொன்னது போலவே எலிமினேஷன் நடைபெற்று இருக்கிறது. அதற்கு ஓப்பன் நாமினேஷன் வைத்து தான் எலிமினேஷன் நடைபெறுகிறது. அதற்கு முன்பு பிக் பாஸ் வீட்டிற்குள் யார் இருக்கலாம்? யார் வெளியே செல்லலாம் என்று வாக்குவாதம் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று தான் இந்த சீசனில் 18 போட்டியாளர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மன நிலையை ஆரம்பத்திலேயே கலைத்து அவர்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்தி 100 நாட்களுக்கு இதை வைத்து கன்டென்ட் உருவாக்க வேண்டும் என்று பிக் பாஸ் கச்சிதமாக பிளான் போட்டு இருக்கிறார். அதில் சாச்சனா சிக்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த முறை பெரிய கோடு ஒன்று போடப்பட்டிருக்கிறது. அந்த கோட்டின் ஒரு பக்கத்தில் சகல வசதிகளும் உள்ள அறைகள் இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் வசதிகள் குறைவான அறைகள் இருக்கிறது. அதில் சொகுசான அறைகள் இருக்கும் பக்கம் பெண்கள் எங்களுக்கு வேண்டும் என்று வாதிட்டு இருந்தனர். ஆண்கள் நாங்கள் அதை உங்களுக்கு தர வேண்டும் என்றால் நீங்கள் ஒரு வாரம் ஆண்கள் யாரையும் நாமினேஷன் செய்யக்கூடாது என்று கண்டிஷன் கொடுத்திருந்தனர்.
ஆரம்பத்தில் இந்த கண்டிஷனுக்கு ஓகே சொன்னதில் சாச்சனாவும் ஒருவர். அதனால் அவர் நான் தானே இந்த கண்டிஷனுக்கு முதலில் சம்மதம் சொன்னேன் அதனால் நானே இந்த நிகழ்ச்சியில் இருந்து முதலில் வெளியேறும் போட்டியாளராக இருந்து விடுகிறேன் என்று உள்ளிருக்கும் அரசியல் தெரியாமல் வாண்ட்டடாக சிக்கி இருக்கிறார்.
ஓபன் நாமினேஷன் நடைபெறும் போது எல்லோரும் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதற்கு முக்கிய காரணங்களை சொல்கின்றனர். விஜே விஷால் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என்னுடைய அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்று வந்திருக்கிறேன். அதனால் முதல் நாளே என்னால் வெளியே போக முடியாது என்று சொல்லிவிடுகிறார். அதைத்தொடர்ந்து பேசிய தீபக் நான் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வரவேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் என்னால் 24 மணி நேரத்திற்குள் நிகழ்ச்சியை விட்டுப் போக முடியாது என்று சொல்லி விடுகிறார்.
அதுபோல ரஞ்சித் நான் இந்த வீட்டிற்குள் வந்து அக்கா, தம்பி, அண்ணன், தங்கச்சி என்று எல்லோரிடமும் பழகி நல்ல கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று வந்திருக்கிறேன். என்னால் இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரே நாளில் போக முடியாது என்று சொல்ல இறுதியாக அதிகமானோர் சாச்சனாவை நாமினேசன் செய்திருக்கிறார்கள் என்று அவர் எலிமினேஷன் செய்யப்படுகிறார்.
அதோடு நேற்று விஜய் சேதுபதி கொடுத்த அனுப்பிய பிக் பாஸ் கோப்பையை உடைத்து நீங்கள் இந்த சீசனில் கோப்பையை நழுவ விட்டு விட்டீர்கள். இனி நீங்கள் வெளியே போகலாம் என்று சொல்ல அங்கிருக்கும் போட்டியாளர்கள் எல்லோரும் கண்கலங்குகின்றனர். அப்போது சாச்சனா எலிமினேஷன் ஆவதை பார்த்து ரஞ்சித் உட்பட பலர் அழுது கொண்டிருக்கிறார். பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் எல்லா போட்டியாளர்களை விடவும் வயதில் குறைந்த போட்டியாளர் சாச்சனா முதல் போட்டியளராக வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதற்கு அதிகமானோர் பிக் பாஸை திட்டி வருகிறார்கள்.
அதுபோல ரஞ்சித் அழுததை பார்க்கும் ரசிகர்கள் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு சின்ன பொண்ணு வெளியே போகிறது என்று அழுகிறாரா? அல்லது நல்லவேளை நாம தப்பிச்சிட்டோம் என்று அழுகிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications