பிக் பாஸ் 8: ரீஎன்ட்ரி கொடுத்த தர்ஷிகா ஆடிய ஆட்டம்.. பிக் பாஸ் போட்ட பிளான்! பேச்சை மாற்றிய ரவீந்தர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சியில் இன்று ஜனவரி 13 ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தர்ஷிகா இன்று ரீஎன்ட்ரி கொடுத்து பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார். அவர் ரவீந்தரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சி இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கிறது. 95 நாட்களைக் கடந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் 6 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்திற்கு முன்னேறி இருக்கிறார்கள். ஏற்கனவே வெளியே சென்ற போட்டியாளர்கள் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறார்கள்.

bigg boss tamil 8 bigg boss 8 8

கடந்த வாரத்தில் 8 போட்டியாளர்கள் உள்ளே வந்திருந்தனர். அதைத் தொடர்ந்து இந்த வாரத்திலும் 8 போட்டியாளர்கள் உள்ளே வர இருக்கிறார்கள். அதில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் தர்ஷிகா பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார். தர்ஷிகாவிற்கும் ரவீந்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ரவீந்தர் தர்ஷிகா விஷாலை வெளியில் தவறாக ப்ராஜெக்ட் செய்து வைத்திருக்கிறார் என்று போட்டியாளர்களிடம் சொல்லி இருந்தார். தற்போது இது குறித்து தர்ஷிகா ரவீந்தரிடம் வாக்குவாதம் செய்கிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் தர்ஷிகா காலடி எடுத்து வைத்ததும் எல்லோரும் அவரை வரவேற்கிறார்கள்.

ஆனால் விஷால் மட்டும் என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லையே என்பது போல முழித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் தர்ஷிகா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பது போல விஷாலை கட்டிப்பிடித்து சிரித்தப்படி கிளம்பி போகிறார்.

அடுத்ததாக ரவீந்தரிடம் நான் விஷால் பெயரை டேமேஜ் செய்யவில்லை. ஆனால் நீங்க அப்படி சொன்னது எனக்கு தவறா தோன்றியது என்று சொல்ல, அதற்கு ரவீந்தர் நீ அப்படி எதுவும் பண்ணவில்லை என்றால் ஏன் எல்லாரும் விஷாலை தவறாக நினைக்கிறார்கள். நீ வெளியில் அந்த மாதிரி ப்ரொஜெக்டர் செய்து வைத்திருக்கிறார் என்று சொல்கிறார்.

அதற்கு தர்ஷிகா, நான் என்ன செய்திருக்கிறேன் என்று எனக்கும் என் கூட உள்ளவர்களுக்கும் தெரியும். நீங்கள் என் வாழ்க்கையில் தலையிடாதீர்கள் என்று தர்ஷிகா கோபப்பட நீயும் என்னிடம் இப்படி பேச வேண்டாம் என்று ரவீந்தர் வாக்குவாதம் செய்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதுபோல இரண்டாவது ப்ரோமோவில் ஜெஃப்ரி மற்றும் சத்யா இருவரும் ரீஎன்ட்ரி கொடுக்கிறார்கள். அவர்களும் அர்னவ் மற்றும் ரவீந்தரை தாக்கி பேசுகிறார்கள். அதிலும் இங்க வயசுக்கு தான் மரியாதையே தவிர சைஸுக்கு கிடையாது என்று ஜெஃப்ரி சொல்கிறார். அதுபோல சத்யா இன்னும் ஒரு அஞ்சு நாள் தான் Fun பண்ணுவோம்.. என்ன அண்ணே.. என்று ரவீந்தரை பார்த்து சொல்ல, அதற்கு உங்களை விட நாங்க நல்லா Fun பண்ணுவோம் என்று ரவீந்தர் கோபமாக பேசுகிறார்.

முத்துக்குமாரனுக்கு பிஆர் ஆக செயல்படுகிறார் என்று அதிகமான விமர்சனங்கள் எழுந்தது. அதற்கு முத்துக்குமரன் வாயாலேயே ஆமாம் என்று சொல்வதற்காக நேற்று விஜய் சேதுபதி எடுத்த முடிவு வெற்றி அடைந்து விட்டது. முத்துக்குமரன் ரவீந்தர் என்னிடம் ஒரு மாதிரி விளையாடுகிறார், மற்ற போட்டியாளர்களிடம் ஒரு மாதிரி விளையாடுகிறார் என்று வெளிப்படையாகவே வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

அதற்கு பிறகு மனம் நொந்து போய் அழுத ரவீந்தரை நான் இப்பவே வீட்டிற்கு போறேன் என்னை விட்டுடுங்க என்று கெஞ்சி இருந்தார். ஆனாலும் பிக் பாஸ் விடாமல் இருந்த காரணம் இன்று வெளியாகும் ப்ரோமோவில் தான் தெரிகிறது. உள்ளே வரும் போட்டியாளர்கள் எல்லோரும் ரவீந்தரை தான் டார்கெட் செய்து அடிக்கிறார்கள். இன்னமும் ரஞ்சித் வர இருக்கிறார்கள். அவர்கள் இனி என்ன பேசப்போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+