அருணுக்காக பிக் பாஸ்க்கு சென்ற அர்ச்சனா.. போகும்போதே செய்த செயல்! உடைபட்ட ரகசியம்.. முத்து பாவம்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டிசம்பர் 27 ஆம் தேதிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் அருணுக்காக பிக் பாஸ் 7 டைட்டில் வின்னரான அர்ச்சனா கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அர்ச்சனாவை தான் காதலிப்பதாக அருண் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில டாஸ்குகள் ஒவ்வொரு சீசனிலும் சம்பிரதாயம் போல தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தான் இந்த வாரத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் பல மாற்றங்கள் நடைபெற்றிருக்கிறது.

இதுவரைக்கும் போட்டியாளர்களின் உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொள்வார்கள். அதிலும் குறிப்பாக சில போட்டியாளர்களின் குழந்தைகள், மனைவி அல்லது கணவன், பெற்றோர் வரும் தருணம் பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கும் உணர்ச்சி மிகுந்ததாக இருக்கும். இத்தனை நாட்களாக போட்டியாளர்கள் அவர்களுடைய உறவினர்களை பார்க்காமல் இருக்கும் நிலையில் அவர்களை திடீரென்று பார்க்கும் நிலையில் அவர்களுடைய உள்ள வெளிப்பாடு என்னவாக இருக்கும் என்பதை பார்த்துக் கொள்வதற்காகவே பலர் இந்த வாரத்தை மிஸ் பண்ணாமல் பார்ப்பார்கள்.
அந்த வகையில் தற்போதைய சீசனில் மிகுந்த எதிர்பார்ப்போடு ரசிகர்களும், போட்டியாளர்களும் இருந்த நிலையில் எதிர்பார்க்காத பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. அதாவது இதுவரைக்கும் எந்த போட்டியாளரின் காதலர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கிடையாது. ஆனால் இந்த முறை வித்தியாசமாக பிக் பாஸ் டாஸ்க் வைத்திருக்கிறது.
இன்றைய எபிசோடில் முதல் ப்ரோமோவில் சௌந்தர்யாவின் காதலரான நடிகர் விஷ்ணு என்ட்ரி கொடுத்தார். அவரைத் தொடர்ந்து அருணின் காதலியான நடிகையும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7வது நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான அர்ச்சனா கலந்து கொண்டிருக்கிறார். இவர் நேற்று கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியானது ஆனால் அவர் இன்று தான் கலந்து கொண்டிருக்கிறார்.
அதற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ப்ரோமோவில் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் வரும்போது எந்தன் முகம் காட்டும் புன்னகைகள் பேசும் என்ற பாடல் ஒலிக்கப்படுகிறது. அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் வந்ததும் நேராக சென்று அருணை கட்டி பிடித்துக் கொள்கிறார். அப்பொழுது பக்கத்தில் இருந்த முத்துக்குமரன் வெட்கத்தில் வாயை மூடி அவருடைய எக்ஸ்பிரஷனை காட்டியது பார்ப்போரை சிரிக்க வைத்தது.
நீண்ட நாள் பிரிந்து இருந்த அருணும் அர்ச்சனாவும் திடீரென்று கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது பக்கத்தில் இருந்த முத்துக்குமரன் வெட்கத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போனதை பார்க்கும்போது அவர் பக்கா 90ஸ் கிட்ஸ் என்று தெரிகிறார். அதுபோல அருணை பார்த்ததும் அர்ச்சனா உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் என்று குரல் தழுதழுக்க பேசி இருந்தார்.
அதற்கு பிறகு அருண் ஹார்லி குயின் ஹார்லி குயின் என்று நான் சொல்லியிருப்பேன். அந்த ஹார்லி குயின் இவங்கதான் என்று அர்ச்சனாவை எல்லோரிடமும் அறிமுகப்படுத்துகிறார். இதுவரைக்கும் பேட்டிகளில் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த நிலையில் ஒருவழியாக இவர்களுடைய காதல் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் உடைபட்டது.
அதற்குப் பிறகு அர்ச்சனா அருணிடம் இந்த வீட்டிற்குள் நான் உங்க கூட இருப்பேன்னு எக்ஸ்பர்ட் பண்ணவே இல்ல... நீ இப்போ எப்படி இருக்கிறாயோ அது ரொம்ப நல்லா இருக்கு. உனக்கு உன் மேல இருக்கிற செல்ப் தம் தான் உன்னை கீழே கொண்டு வருது என்று அட்வைஸ் செய்கிறார். அதற்கு அருண் என்னோட பெஸ்ட்டை நான் அடுத்த வாரத்தில் டிக்கெட் 2 பினாலேவில் கொடுக்கிறேன் என்று உறுதி கூறுகிறார்.
பிறகு யார் என்ன சொன்னாலும் நீ ஆல்வேஸ் மை ஹீரோ என்று அர்ச்சனா அருணிடம் சொல்லி இருக்கிறார். அதோடு ஒரு பாட்டையும் பாடிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பி வருகிறார். இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே அர்ச்சனா ஒவ்வொரு வாரமும் அருணுக்காக சப்போர்ட் செய்து போஸ்ட் போட்டுக் கொண்டிருப்பார்.
இப்போது வீட்டிற்குள் சென்று சக போட்டியாளர்களிடம் என்னவெல்லாம் பேசினார் என்று இன்னும் 24 மணி நேர எபிசோடில் காட்டப்படவில்லை. அருணுக்காக விஜய் சேதுபதி பேசியதே தவறு என்று அர்ச்சனா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். ஆனால் அவரை எப்படி விஜய் டிவி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுமதித்தார்கள் என்பது தான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஆனாலும் எப்படியும் இவர் இன்று உள்ளிருக்கும் சில போட்டியாளர்களிடம் தன்னுடைய மனதில் இருக்கும் கோபத்தை கொட்டுவார் என்று தெரிகிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications