பிக்பாஸ் 8ல் டைட்டில் வின்னர் இவர்தானா? லீக் ஆன தகவல்.. கடைசியில் நடந்த மாற்றம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலேவில் டைட்டில் வின்னராக யார் ஜெயித்தார் (bigg boss tamil season 8 winner) என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து இந்த நிகழ்ச்சிய பற்றிய பரபரப்பு இணையத்தில் இருந்து கொண்டே இருந்தது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நாளை மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதற்கான பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சீசனில் ஆரம்பத்தில் 24 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்திற்கு சென்று இருக்கின்றனர். அதில் முத்துக்குமரன், ரயான், பவித்ரா, சௌந்தர்யா மற்றும் விஷால் ஆகிய ஐந்து பேரில் யார் டைட்டில் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
ஏற்கனவே இவர் டைட்டில்... ஜெயிப்பார் அவர் டைட்டில் ஜெயிப்பார் என்று இந்த சீசனில் யூகிக்க முடியாத வகையில் தான் போட்டியாளர்களின் விளையாட்டு இருந்தது. ஆனாலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த டாஸ்க் மற்றும் விளையாட்டின் அடிப்படையில் தீபக் அல்லது முத்துக்குமரன் ஜெயிப்பார் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது.
ஆனால் கடந்த வாரத்தில் தீபக் எதிர்பார்க்காத விதமாக வெளியேற்றப்பட்டார். இது பிக் பாஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதற்கு பிறகு நேற்று முன்தினம் ஜாக்குலின் வெளியற்றப்பட்டிருக்கிறார். இப்படியான நிலையில் இறுதி கட்டத்தில் சௌந்தர்யா ஜெயிக்கப் போகிறாரா? அல்லது முத்துக்குமரன் ஜெயிக்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் நாளை கிராண்ட் பினாலேக்கான ஷூட்டிங் கன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முத்துக்குமரன் டைட்டில் ஜெயித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் தான் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அதில் முத்துக்குமாரனும் ஒருவர்.
அதுபோல சௌந்தர்யா, ரயான் போன்றோருக்கு பிஆர் வேலை அதிகமாக நடக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது. ஆனாலும் ரயான் எல்லா இடங்களிலும் டாஸ்க்களில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். டிக்கெட் டூ பினாலேவில் கூட அவர்தான் வெற்றி பெற்று இருந்தார். அவர் நேரடியாக பினாலேவில் நுழைந்த முதல் போட்டியாளராக இருந்தார்.
அதற்குப் பிறகு பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டபோது முத்துக்குமரன் முதலில் ஐம்பதாயிரம் பெட்டியை எடுத்து இருந்தாலும், இரண்டாவதாக ரயான் 2 லட்சம் பெட்டியை தூக்கிக்கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்திருந்தார். அவருடைய விளையாட்டும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு இருக்கும் நிலையில் கடைசியில் முத்துக்குமரன் ஜெயிக்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
முத்துக்குமரனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். முத்துக்குமரனின் வெற்றியை சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை என்று நினைக்கிறீர்களா? உங்கள் கருத்தை தட்டி விடுங்க பாஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications