Bigg Boss 8: CWC சுனிதாவை கட்டி பிடித்தபோது! "ஐயோ கமல் சார் இங்கில்லை"! கலாய்த்த விஜய் சேதுபதி!
சென்னை: குக் வித் கோமாளி சுனிதாவும், அவருடைய தங்கை நந்திதாவும் தன்னை கட்டி அணைத்த போது, நடிகர் விஜய் சேதுபதி, "இங்கு கமல்ஹாசன் சார் இல்லை" என அவரது கட்டிபிடி வைத்தியத்தை கலாய்த்தார்.
பிக்பாஸின் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவருடைய உடைக்காகவும் அவரது பேச்சுக்காகவும் நிறைய ரசிகர்கள் பிக்பாஸ் சீசன்களை வாரந்தோறும் அவர் வரும் நாட்களில் பார்வையிட்டு வந்தனர்.

அவர் சிறந்த இலக்கியவாதி என்பதால் வாரந்தோறும் புத்தகங்களை பரிந்துரைப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த நிலையில் அவர் தக் லைஃப் என்ற படத்தில் கமிட்டானதால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவது என தேடி வந்த நிலையில் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்தனர். விஜய் சேதுபதி ஏற்கெனவே சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ரவீந்திரன், சஞ்சனா, தர்ஷா குப்தா, சுனிதா, சத்யா, ரஞ்சித், தீபக், பவித்ரா, தர்ஷிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு சுனிதா வந்தார். இவர் ஒரு வெஸ்டர்ன் டான்ஸர். குக் வித் கோமாளியில் கோமாளியாக கலந்து கொண்டு எல்லாரையும் சிரிக்க வைத்தார். அஸ்ஸாமை சேர்ந்த சுனிதா கோகாய், தனது தாய், தந்தையை விட்டுவிட்டு சென்னையில் தங்கியுள்ளார்.
அவர் 2011 ஆம் ஆண்டு முதல் இங்கு இருந்து வருகிறார். தமிழ் தத்தி தத்தி பேசுவார். தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் அவர் தமிழில் பாடுவது, கவிதைகளை சொல்வது என இருப்பார். அவர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு அவருடைய தாய், தந்தை, தங்கை ஆகியோர் வந்திருந்தனர்.
சுனிதாவின் தங்கை நந்திதா, விஜய் சேதுபதியை ஹக் செய்ய கேட்டார். அவர் மேடைக்கு வருமாறு அழைத்தார். நேராக வந்த நந்திதா, தனது அக்காவை கட்டி அணைத்துவிட்டு, பிறகு விஜய் சேதுபதியை கட்டி அணைத்தார். இதைத் தொடர்ந்து சுனிதாவும், விஜய் சேதுபதியை ஹக் செய்தார்.
அப்போது விஜய் சேதுபதி, அய்யோ கமல் சார் இல்லை. அவரிடம் இருந்து கற்றுக் கொண்ட கட்டிபிடி வைத்தியத்தை நான் பயன்படுத்துகிறேன் என காமெடியாக தெரிவித்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications