பிக் பாஸ் விட்டு வந்த பிறகு அர்னவ் செய்த செயல்.. கோபப்பட்ட விஜய் சேதுபதி.. எதிர்பார்க்காத சம்பவம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த அர்னவ் போட்டியாளர்கள் பற்றி பேசியதற்கு விஜய் சேதுபதி அவமானப்படுத்தி இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி இதுவரைக்கும் இல்லாத வகையில் தான் இருந்து வருகிறது. இதுவரைக்கும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும்போது இந்த நிகழ்ச்சியில் ஏதாவது தப்பு செய்தால் கூட கமல்ஹாசன் குத்தலாக தான் பேசுவார். ஆனால் விஜய் சேதுபதி எந்த பிரச்சினையாக இருந்தாலும் முகத்துக்கு நேராக பேசி விடுகிறார்.

அதுபோல சின்ன சின்ன விஷயங்களையும் நோட்டீஸ் பண்ணி வார இறுதி நாட்களில் போட்டியாளர்களுக்குள் சண்டை ஏற்படுவது போலவே போட்டு கொடுத்து விடுகிறார். இதில் யார் தப்பு யார் தவறு என்று ரசிகர்களுக்கும், உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கும் புரியும் வகையில் வெளிப்படையாக எல்லா பிரச்சனைகளையும் அம்பலப்படுத்தி விடுகிறார். இதனாலையே வார இறுதி நாட்கள் எபிசோடு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
அதே நேரத்தில் நேற்று நடந்த நிகழ்வு யாரும் எதிர்பார்க்காத நிகழ்வு என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது எலிமினேஷன் ஆக நேற்று அர்னவ் வெளியேற்றப்பட்டார். அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் ரோடு ஏற்பட்ட பிரச்சனை சின்னத்திரை ரசிகர்கள் பலருக்கும் தெரியும். அதையெல்லாம் மக்கள் மனதில் இருந்து மாற்ற வேண்டும் என்பதற்காக இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதே நேரத்தில் வெளிய அன்ஷிதா கூட ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிட்டும் பல பேட்டிகளும் கொடுத்த அர்னவ் பிக் பாஸ் வீட்டிற்குள் இருவரும் எதிர்பாராத விதமாக கலந்து கொண்டது போலவே ரியாக்ஷன் கொடுத்து கொண்டு இருந்தனர். இதுவே இவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சனங்களையும் சந்தித்து வந்தது.
ஆனாலும் நேற்று வாக்குகளின் அடிப்படையில் அர்னவ் வெளியேற்றப்பட்டார். அவர் நிகழ்ச்சியில் இருக்கும் போது விஜய் சேதுபதி போன வாரம் உங்கள் எல்லாருக்கும் அவார்ட் கொடுத்தாங்களே அதில் நீங்கள் உங்களுக்கு கொடுத்த பட்டத்தை வேறு யாருக்கு கொடுக்கப் போறீங்க என்று கேட்ட கேள்விக்கு மொத்த போட்டியாளர்களும் அர்னவ்தான் எல்லா பட்டங்களுக்கும் சரியானவர் என்று சொல்லி இருந்தனர்.
இதுவே அர்னாவை அதிகமாக கோபப்படுத்தி இருக்கிறது. அவர்கள் மீது தனக்குள்ள கோபத்தை பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது வெளிப்படுத்தி இருந்தார். எல்லாரும் குரூப் சேர்ந்து விளையாடுறாங்க என்னை ஒதுக்கி வைக்கிறாங்க என்று பேசி இருந்தார். இறுதியில் அவர் எலிமினேஷன் என்று சொன்னபோது கூட தன்னுடைய ட்ராபியை ஆக்ரோஷமாக உடைத்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதைத் தொடர்ந்து மேடைக்கு வந்த பிறகு கூட தன்னுடைய வன்மத்தை கக்கி விட்டார். விஜய் சேதுபதி உள்ளிருக்கும் போட்டியாளர்களிடம் கடைசியாக ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லுங்க என்று சொன்னதும் எல்லோருக்கும் அட்வைஸ் பண்ண தொடங்கினார். அப்போது ஒரே வரிகள் டப்புன்னு சொல்லி முடிங்க ஏன் ஜவ்வா இழுக்கிறீங்க என்று விஜய் சேதுபதி டோனை மாற்றினார்.

உடனே பெண்கள் டீம் நல்லா விளையாடுறாங்க என்று சொல்லிவிட்டு ஆண்கள் அணியில் எல்லோரும் ஜால்ராஸ் என்று சத்யா, விஷால், அருண் என எல்லார் பெயரையும் குறிப்பிட்டு அவர்களைப் பற்றி வாடா போடா என திமிராக பேசினார். இதை சற்றும் எதிர்பார்க்காத விஜய் சேதுபதி இடையே குறுக்கிட்டு உங்க வன்னமத்தை கக்குற இடம் இது கிடையாது. கருத்தை மட்டும் சொல்லுங்க.
இதையெல்லாம் நீங்க உள்ளே பேசி இருக்கணும் அங்க விட்டுட்டு இங்க பேசுறது அநாகரீகம். தயவு செய்து மரியாதையா பேசுங்க. நம்ம மற்றவர்களை மரியாதையாக நடத்தினால் தான் நமக்கான மரியாதை கிடைக்கும் என்று முகத்துக்கு நேராக திட்டிவிட்டார். பிறகு இறுதியாக ஆண்கள் அணியினர் குரூப்பாக விளையாட வேண்டாம் என்று அர்னவ் அட்வைஸ் செய்தார்.
அப்போது நான் உங்களிடம் ஒரு உண்மையை சொல்றேன் உங்களை நாமினேட் செய்தது பெண்கள் அணியினர் தான். இவ்வளவு நாளா ஆண்கள் கூடவே இருந்துட்டு வெளியே வந்ததும் இப்படி அநாகரிகமா நடந்து கொள்கிறீர்கள் என்று அர்னவிடம் சொல்ல அர்னவ் முகம் சுருங்கி போய்விட்டது. ஆனாலும் அர்னவின் செயல்பாடு தான் இப்போது இணையத்தில் விமர்சிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications