பிக் பாஸ் 8: சௌந்தர்யாவ பார்க்க பாவமா இருந்தது.. இப்படியா விளையாடுவீங்க? விஜய் சேதுபதி கேட்ட கேள்வி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் நடந்த டாஸ்க் போட்டியாளர்கள் அணியாக சேர்ந்து விளையாடும் போது சௌந்தர்யாவின் விளையாட்டை பார்க்க பாவமாக இருந்தது என்று அவரோடு சேர்ந்து விளையாடிய அருண் மற்றும் விஷாலிடம் விஜய் சேதுபதி கோபப்பட்டு இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சியில் இன்று சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி இந்த வாரம் முழுக்க என்ன நடந்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஆரம்பத்தில் ராணவ் அடிபட்டபோது சக போட்டியாளர்கள் அவருக்கு உதவி செய்யாமல் அவர் நடிக்கிறார் என்று கிண்டல் செய்ததும் அவரைப் பற்றியும், ஏளனமாக பேசியது குறித்தும் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அடுத்ததாக குரூப்பாக சேர்ந்து விளையாடியது குறித்து விசாரிக்கிறார். அப்போது இந்த வாரத்தில் மஞ்சள், பிங்க், சிவப்பு, ப்ளூ என்று நான்கு அணியாக சேர்ந்து போட்டியாளர்கள் விளையாடும் போது ஆரம்பத்திலேயே பிங்க் அணியில் இருந்த சௌந்தர்யா, அருண், விஷால் மூன்று பேரும் விட்டுக் கொடுத்தது குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்.
அப்போது சௌந்தர்யா என்னுடைய அணியில் இருந்த மற்ற ரெண்டு பேரும் என்னிடம் எந்த முடிவும் கேட்காமல் மற்ற போட்டியாளர்களுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். இதனால் என்னால் சரியாக விளையாட முடியவில்லை.
நாங்கள் தோற்றுப் போனதற்கு காரணம் கூட என் அணியில் இருந்தவர்கள் என்னிடம் கேட்காமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்து எங்கள் கோட்டையை கட்டாமல் போனதுதான் என்று சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு அருண் மற்றும் விஷால் நாங்கள் விளையாடினோம் ஆனால் எங்களால் அதிகமான கற்கள் எடுக்க முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அப்போது விஜய் சேதுபதி அணியில் இருக்கும்போது மூன்று பேரையும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுக்காமல் நீங்கள் இரண்டு பேரும் மட்டுமே எடுத்த முடிவால் சௌந்தர்யா விளையாட்டை பார்ப்பதற்கு பாவமாக இருந்தது. அவர் விளையாட்டை தொடங்குவதற்கு முன்பே விளையாட்டு முடிந்து தனியாக இருந்தது வருத்தமாக இருந்தது.
மற்ற அணியின் எல்லோரும் போராடி விளையாடினார்கள். ஆனால் நீங்கள் இரண்டு பேரும் விட்டு கொடுத்ததால் சௌந்தர்யா விளையாட வேண்டும் என்று நினைத்தும் விளையாட முடியவில்லை என்று விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications