ராணவுக்கு நடந்தது அநியாயம்! இதை ஏன் பண்ணல! அந்த பிரபலத்திடம் நறுக்கென்று கேட்ட விஜய் சேதுபதி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் ராணவிற்க்கு கடந்த வாரத்தில் அடிபட்டிருந்தது குறித்து உள்ளிருக்கும் போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி சனிக்கிழமை எபிசோட்டில் விசாரணை நடத்துகிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் ராணவிற்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்க் விளையாடும் போது கீழே விழுந்ததில் அடிபட்டது. அப்போது கூட இருந்த ஒரு சில போட்டியாளர்கள் அவர் நடிக்கிறார் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அது குறித்து இன்று சனிக்கிழமை எபிசோட்டில் விஜய் சேதுபதி கேள்வி கேட்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் நீங்கள் நடிக்கிறீங்க என்று சிலர் சொன்னாங்களே அது யாரு ராணவ் என்று கேட்டதும் ஜெஃப்ரி, விஜே விஷால், ரயான், சௌந்தர்யா மற்றும் அன்ஷிதா எழுந்து நிற்கிறார்கள். அப்போது ஜெஃப்ரியிடம் ராணவ் கீழே விழுந்து அடிபட்டு வலியில் துடிக்கும் போது உங்களுக்கு உதவனும்னு தோணலையா? அது எப்படி நடிப்புனு தோணுச்சு என்று கேட்கிறார்.
அதற்கு ஜெஃப்ரி, ராணவ் கீழே விழுந்தது ஒரு பக்கமாக ஆனால் வலிக்கிறது என்று சொன்னது இன்னொரு பக்கம். அதனால் எனக்கு ராணவ் நடித்ததாக தோன்றியது என்று ஜெஃப்ரி சொல்ல, நீங்க விளையாட்டு பிளேயர் தானே உங்களுக்கு விளையாட்டில் இதுபோல சதை கிழிவு வரும் என்று தெரியும் தானே?

எனக்கு கூட கடந்த 2010 இல் ஒரு சண்டைக்காட்சியில் சூட் செய்யும் போது சதை கிழிவு ஏற்பட்டிருக்கிறது. அப்போ எனக்கு அது வலி தெரியல. வீட்டுக்கு வந்த பிறகு திடீர்னு நான் சும்மா நடக்கும்போது கால் ஸ்லிப் ஆகி சதை கிழிவு அதிகமாகிடுச்சு. அதுபோல டாஸ்க் விளையாடும் போது ராணவ்க்கு சதை கிழிவு ஏற்பட்டிருக்கலாம், கீழே விழுந்ததும் அவனுக்கு வலி வந்திருக்கும் என்று ஏன் உங்களுக்கு தோணவில்லை?
நீங்கள் ஒரு விளையாட்டு பிளேயரா இருந்துட்டு இப்படி நடிக்கிற என்று சொல்லலாமா? என்று திட்டுகிறார். ஜெப்ரியைதொடர்ந்து அன்ஷிதா, சௌந்தர்யா என மொத்த பேரையும் விஜய் சேதுபதி இன்று கேள்விகளால் தொலைத்து எடுத்து திட்டி தீர்த்து எடுத்து இருக்கிறார். அதுவும் ரசிகர்கள் கேட்ட கேள்விகள் எல்லாவற்றையும் வரிசை கட்டி கேட்ட விதம் பலருடைய பாராட்டை பெறுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications