பிக் பாஸ் 8: கானா பாடல், மானாட்டம், மயிலாட்டத்துடன் தொடங்கிய பிக் பாஸ்! விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பிரமாண்டமாக இப்போது தொடங்கி இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கி விஜய் சேதுபதி பேசியது பலரையும் கைதட்ட வைத்திருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி இருக்கிறது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற வரிகளோடு கானா பாடல் ஒலிக்கிறது. பிறகு கெத்தாக விஜய் சேதுபதி மேடைக்கு வருகிறார். அவரை மானாட்டம், மயிலாட்டத்துடன் வரவேற்று இருக்கிறார்கள்.

மேடையில் ஏறிய விஜய் சேதுபதி எல்லோருக்கும் வணக்கத்தை சொல்லிவிட்டு நான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறேன் என்று சொன்னதும் எப்படி செய்யலாம் என்று ரொம்ப யோசித்தேன். அதற்குப் பிறகுதான் நான் என்னுடைய மனதில் பட்டதை நான் சொல்ல போகிறேன் என்று முடிவெடுத்தேன். ஒவ்வொரு நாள் தூங்கி முழிக்கும்போது நான் சில நேரங்களில் ராஜா போல இருப்பேன். சில நேரங்களில் ஜாலியாக இருப்பேன். சில நேரங்களில் வில்லத்தனமும் செய்வேன். அதனால் எந்த நேரத்தில் எப்படி இருப்பேன் என்று தெரியாது.
மக்கள் உங்கள் மனதில் பட்டதை நீங்கள் சொல்லுங்கள். நான் ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது பழியை போட்டு விடுவேன். நீங்க தானே ஓட்டு போட்டீங்க என்று நான் மாற்றி விடுவேன். எதையும் நாம பேசி முடிவெடுக்கலாம் என்று பேசிவிட்டு பிக் பாஸ் வீட்டில் போய் இருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற விஜய் சேதுபதியை பிக் பாஸ் வரவேற்று இருக்கிறார். விஜய் சேதுபதியின் முழு பெயரை சொல்லி பிக் பாஸ் கூப்பிட்டதால் நீங்கள் என்னுடைய முழு பெயரை சொன்னால் நேரம் முடிந்துவிடும் சேது என்று சொல்லுங்க என்று சொல்ல பிக்பாஸும் அதுபோலவே சரி சேது சார் என்று சொல்கிறார். பிறகு வீட்டிற்குள் நடுவில் பெரிய கோடு போட்டு இருப்பதை சுட்டிக்காட்டி இது எதற்காக போடப்பட்டதுன்னு தெரியலையே இதில் ஏதோ வில்லங்கம் இருப்பது போல தெரிகிறது என்று சூசகமாக சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து கிச்சனுக்குள் சென்று பிறகு பெட்ரூம் வழியாக வருகிறார். அங்கு சின்னதாக பெட்ரூம் இருப்பதை பார்த்து இவ்வளவு சின்ன ரூம் போதுமா என்று கேட்டுக்கொள்கிறார். அதோடு அங்கு பேட் எல்லாம் ஒன்றாக போடப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து பாத்ரூம் போகும் போது அங்கே இரண்டு பாத்ரூம் மட்டுமே இருக்கிறது.
இவ்வளவு பேர் இருக்கும் இடத்தில் இரண்டு பாத்ரூம் போதுமா? என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு ஒரு சின்ன ஓட்டை இருக்கிறது அதன் வழியாக இன்னொரு அறைக்கு போகிறார் .அங்கு பெரிய பாத்ரூம் இருக்கிறது அதற்கு பக்கத்தில் ஒரு பெரிய பெட்ரூம் அறையும் இருக்கிறது. மொத்த வீட்டையும் சுத்தி பார்த்துவிட்டு விஜய் சேதுபதி மீண்டும் மேடைக்கு வருகிறார்.












Click it and Unblock the Notifications