Bigg Boss: பிக் பாஸ் சீசன் 9 ஆடிஷன் மோசடி! அடப்பாவமே இப்படியுமா ஏமாத்துறாங்க! உஷார் மக்களே உஷார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் 8 சீசன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்திருக்கிறது. அடுத்த ஒன்பதாவது சீசன் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் ஆடிஷன் என்று சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கும் சிலரை குறி வைத்து ஏமாற்று வேலை நடப்பதாக செய்தி வாசிப்பாளர் ஒருவர் கொடுத்த பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bigg Boss Vijay TV

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை சச்சரவுகளும் பரபரப்பு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி தொடங்கிய பிறகு சோசியல் மீடியாவில் பிக் பாஸ் பற்றி தான் அதிகமான பேச்சு இருக்கும். ஆனால் இப்போது தமிழில் பிக்பாஸ் ஒன்பதாவது சீசன் தொடங்குவதற்கு முன்பே இது பற்றிய எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. காரணம் இந்த சீசனில் அதிகமான சோசியல் மீடியா பிரபலங்களும் கலந்து கொள்ளப் போகிறார்கள். இதுவரைக்கும் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த முறை சோசியல் மீடியா பிரபலங்கள் மற்றும் சாதாரண மக்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிக் பாஸ் 9 போட்டியாளர்கள்

இந்த தகவல் வெளியான சில நாட்களிலேயே இப்போது சில அதிர்ச்சிகரமான சம்பவங்களும் வெளியே வருகிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ஆன்லைன் ஆடிஷன் என்று சிலர் சோசியல் மீடியா பிரபலங்களிடம் பொய்யான மெசேஜ் செய்து வருகிறார்களாம். இது பற்றி சமீபத்தில் "வர்தமான் தமிழ்" என்ற youtube சேனலில் செய்தி வாசிப்பாளர் அம்ருதா என்பவர் தனக்கு நடந்த சம்பவத்தை பற்றி வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

பிக் பாஸ் ஆடிஷன்

அவர் அதில் பேசும்போது, நாங்கள் இந்த விஷயத்தை வெளியே சொல்வதற்கு காரணம் சோசியல் மீடியாவில் ஒரு ஸ்கேம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் தெரியாமல் யாரும் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான். எனக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஐடியில் இருந்து மெசேஜ் வந்தது. நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்ட்ரஸ்ட் இருக்கீங்களா என்று கேட்டார்கள். எனக்கு அது பேக் ஐடியா? ஒரிஜினலா? என்ற சந்தேகம் இருந்தது. அப்போது அவர்கள் எங்கள் ஆபீஸிலிருந்து உங்களிடம் பேசுவார்கள் என்று மெசேஜ் செய்திருந்தார்கள்.

பேக் ஐடி தொல்லை

பிறகு அடுத்த நாளே திவ்யா என்ற ஒரு ஐடியில் இருந்து ஒரு பெண் பேசுவது போல மெசேஜ் வந்தது அதில் நீங்கள் ஆட்டிஷனில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் உங்களுடைய இன்ட்ரொடக்ஷன் வீடியோவை எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். எனக்கு சந்தேகமாக இருந்ததால் வீடியோ அனுப்பவில்லை. அத்துடன் அந்த மெசேஜ் முடிந்து விட்டது. அதற்குப் பிறகு அவர்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு பார்த்திபன் என்ற ஒரு ஐடியில் இருந்து எனக்கு மெசேஜ் வந்தது. அதில் நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமாக இருக்கிறீர்களா? என்று முதலில் கேட்கப்பட்டது நானும் ஆமாம் என்று சொன்னேன் ஆனாலும் எனக்கு அந்த ஐடி மீதும் சந்தேகம் இருந்ததால் என்னுடைய ஆபீசில் இருந்தவரிடம் சொல்லி இது விஜய் டிவி ஆபீஸில் வேலை பார்ப்பவர்களின் ஐடி தானா என்று செக் பண்ண சொன்னேன் அவர்கள் செக் பண்ணியது பேக் ஐடி என்று சொல்லிவிட்டார்.

பொய் ஆடிஷன்

அதற்கு பிறகு இன்னொரு ஐடியில் இருந்து எனக்கு மெசேஜ் வந்தது அது விஜய் டிவியில் இருந்து வந்ததாகவே என்னிடம் சொன்னார்கள். ஆனால் அந்த ஐடி விஜய் டிவி சேனலில் இருந்து வந்தது என்று நம்பும் வகையில் தான் இருந்தது. அப்போது ஆடிஷனில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முன்பு நாங்கள் கேட்கிற கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும் உங்களுடைய பதில்கள் எங்களுக்கு திருப்தியாக இருந்தால் நீங்கள் விஜய் டிவி ஆபீஸ்க்கு வந்து ஆடிஷனில் கலந்து கொள்ள கூப்பிடப்படுவீர்கள் என்று சொன்னார்கள் நானும் சரி என்றேன். அப்போது அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் அங்கு நீங்கள் நீங்களாக இருக்க முடியாது நாங்கள் என்ன சொல்கிறமோ அது போலவே தான் செய்ய வேண்டும், நாங்கள் காதலிக்க வேண்டும் என்று சொன்னால் நீங்கள் யாரை வேண்டுமென்றாலும் காதலிக்கணும் என்று சொன்னார்கள். அதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

குதர்க்கமான கேள்வி

அதற்குப் பிறகு சந்தேகம் வர தொடங்கியது. அப்போது அவர்கள் நீங்கள் இதற்கு முன்பு காதலித்திருக்கிறீர்களா? ஸ்கூல் காலேஜ் படிக்கும் போது காதலித்தவர்களின் பெயர் என்ன? அவர்களிடம் எப்படி பழகினீர்கள்? எங்கவெல்லாம் வெளியே போனீர்கள்? என்று அடுத்தடுத்து கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அதற்குப் பிறகு எனக்கு சந்தேகம் இன்னும் அதிகமானது. நான் ஒரு பிரபல சேனலில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறேன் அது என்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் தெரியும். அது தெரிந்தும் இதுபோல என்னிடம் பேசுகிறார்கள் என்றால் தெரியாத மக்களிடம் எவ்வளவு எல்லாம் பேசுவார்கள் என்று எனக்கு பயம் வந்தது என்று அந்தப் பெண் கூறி இருக்கிறார்.

இந்த சீசனில் சோசியல் மீடியா பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்றதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலர் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். ஆனால் இது போன்ற பேக் ஐடிகளிடம் அவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்கு விஜய் டிவி தரப்பில் இருந்து சரியான விளக்கம் கொடுத்தால் பலருக்கு உதவியாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+