பிக் பாஸில் முதல் வாரமே வெளியேறும் நபர் இவர்தான்! அனுதாபத்தில் திவாகருக்கு நடந்த அதிசயம்! லீக்கான தகவல்
சென்னை: விஜய் டிவியில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி ஒரு வாரம் ஆவதற்குள்ளேயே சண்டை, கண்ணீர், 'உப்புக் கரிக்கும்' டிராமான்னு ஒரே அமர்க்களம் தான்! மொத்தம் 20 போட்டியாளர்கள் களமிறங்கியிருக்கும் இந்த வீட்டுல, பாதிக்கும் மேல் சோஷியல் மீடியா பிரபலங்கள் தான்! இந்த வார இறுதியில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படப் போகும் நிலையில், நாமினேஷன் லிஸ்ட்டில் சிக்கியவர்களைப் பற்றிய சுவாரஸ்யமான கிசுகிசுக்கள் இணையத்தில் றெக்கை கட்டிப் பறக்குது!

நாமினேஷன் லிஸ்ட்
பிக் பாஸ் விதிகளின்படி, வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் வெளியேற்ற நினைக்கும் இருவரை நாமினேட் செய்ய, முதல் வாரத்திலேயே சிலர் டேஞ்சர் ஸோனில் சிக்கியிருக்காங்க.
இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள்: வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், ஆதிரை, வியானா, பிரவீன் ராஜ், அப்சரா, கலையரசன், மற்றும் இயக்குநர் பிரவீன் காந்தி. இதில் ஆரம்பத்தில், 'வாட்டர்மெலன் ஸ்டார்' திவாகரை டார்கெட் பண்ணி, அவர்தான் முதல் ஆளாக வெளியேறுவார்னு பலரும் கணிச்சாங்க. ஆனா, வீட்டில் இருக்கிறவங்க எல்லாரும் சேர்ந்து அவரையே டார்கெட் செஞ்சதால, வெளியில் இருக்கிற மக்கள் மத்தியில் அவருக்குப் பெரும் அனுதாபம் கிளம்பிவிட்டது! இப்போ, திவாகர்தான் அதிக வாக்குகளை அள்ளி முதலிடத்தில் அசைக்க முடியாமல் நிற்கிறார்.
ஆக்ஷன் இல்லாமல் சிக்கிய இயக்குநர்
திவாகருக்கு அடுத்தபடியாக, ஆதிரை, வியானா ஆகியோரும் நல்ல வாக்குகள் பெற்றுச் சேஃப் ஸோனில் உள்ளனர். பிரவீன் ராஜ் மற்றும் அப்சராவுக்கும் ஓரளவு கணிசமான வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால், இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருக்கும் இருவர், கலையரசன் மற்றும் இயக்குநர் பிரவீன் காந்தி தான்! இதில், இயக்குநர் பிரவீன் காந்திக்குத்தான் மிக மிகக் குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
வெளியில் இருக்கும்போது சர்ச்சைப் பேச்சுக்கும், ஆக்ஷன் படங்களுக்கும் பேர் போன பிரவீன் காந்தி, பிக் பாஸ் வீட்டுக்குள்ளே எந்தவிதமான கன்டென்ட்டையும், பெரிய ஆக்ஷனையும் காட்டாமல் ரொம்பவே அமைதியா இருந்தாரு. 'இவரு சினிமாவுல பேசுற மாதிரி ஒரு பஞ்சாயத்தையாவது வெடிக்க வைக்க மாட்டாரா?'ன்னு எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
முதல் வாரமே ஆக்ஷன் கட்
கன்டென்ட், சண்டை, டிராமா எதுவுமே இல்லாமல் போனதாலயோ என்னவோ, மக்கள் அவருக்குக் கம்மியான வாக்குகளைக் கொடுத்துட்டாங்க போல! அதனால், பிக் பாஸ் வீட்டுல இருந்து முதல் ஆளாக எலிமினேட் ஆகும் போட்டியாளராக, இயக்குநர் பிரவீன் காந்தி இருக்க அதிக வாய்ப்புகள் இருக்குன்னு தகவல் வெளியாகி, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்துல, பிக் பாஸ் வீடு என்பது 'கன்டென்ட்' என்ற விதிப்படிதான் இயங்கும் என்பதை இயக்குநர் பிரவீன் காந்தி முதல் வாரத்திலேயே உணர்ந்திருக்கக் கூடும்! அடுத்தடுத்து வரப் போகும் வாரங்களில், இன்னும் எத்தனை டிராமாக்கள் நடக்கப் போகிறதுன்னு ரசிகர்கள் இப்போதே சுவாரஸ்யமாகக் காத்திருக்காங்க!
முதல் வாரமே வெளியேறும் இயக்குநர் பிரவீன் காந்தி, வெளியில் வந்து பிக் பாஸ் வீடு பற்றி என்ன கிண்டல் செய்வார்னு நினைக்கிறீங்க?
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications