நீ எதுக்கு ஐ லவ் யூ சொன்ன சொல்லுடி.. அர்ச்சனாவை பர்சனலாக தாக்கிய நிக்சன்.. விஷ்ணு கேட்ட செம பாயிண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நிக்சன் மற்றும் அர்ச்சனா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இருவருக்கும் இடையே வாக்குவாதத்தின் போது நிக்சன் அர்ச்சனா கேமரா முன்னாடி ஐ லவ் யூ என்று சொன்ன விஷயம் குறித்து பர்சனலான பல விஷயங்களை பற்றி தாக்கி பேசி இருக்கிறார்.

அதே நேரத்தில் நிக்சன் பேசிய வார்த்தைகளுக்கு சக போட்டியாளர்கள் யாரும் வாய் திறக்காத போது விஷ்ணு மட்டும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீடு பள்ளிக்கூடமாக மாறி இருந்த நிலையில் நேற்று பிக் பாஸ் வீடு கல்லூரி ஆக மாறி இருந்தது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களாக போட்டியாளர்கள் பிரிந்து இருந்தனர். அதில் அர்ச்சனா மாயா மற்றும் பூர்ணிமாவை வச்சு செய்து இருந்த நிலையில் நிக்சன் அர்ச்சனாவை வெச்சி செய்திருந்தார்.
இறுதியில் இந்த டாஸ்கின் முடிவில் நிக்சன் மற்றும் ரவீனாவிற்கு கோல்ட் ஸ்டார் வழங்கப்பட்டது. இந்த டாஸ்க் முடிவடைந்த பிறகு அர்ச்சனா மற்றும் நிக்சன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருந்தது. அப்போது நிக்சன் ஒருவரை துள்ளுரவன் பலியாடு என்றெல்லாம் முத்திரை குத்துவது நீங்கள்தான். நீங்கள் மற்றவர்களை மிகவும் கேவலமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
முதல் வாரத்தில் அழுது கொண்டு இருந்த நீங்கள் இப்ப வரைக்கும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள பத்தி நான் நிறைய விஷயம் பேச வேண்டியது இருக்கும் என்று பேசி இருந்தார். இப்படியான நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில் அர்ச்சனா மற்றும் நிக்சனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அர்ச்சனாவை பார்த்து நிக்சன் காரி துப்பி வாடி போடி நாயே என்றெல்லாம் பேசினார்.
அதோடு நான் கலாய்க்க ஆரம்பித்தால் மூன்று நாள் அழுவ, மூஞ்ச பாரு, கர்மம், சும்மா வினுஷா, வினுஷானு சொன்னா அவ்வளவுதான். நான் யாரிடம் பேசினால் உனக்கு என்னடி...? நீ கேமரா முன்னாடி யாருக்கு போய் ஐ லவ் யூ சொன்ன...? எதுக்கு சொன்ன சொல்லுடி..? என்று கேட்க, அதற்கு அர்ச்சனா அது என்னுடைய பர்சனல் என்று சொல்கிறார். அதற்கு நிக்சன் அதுபோலத்தான் இது என்னுடைய பர்சனல்.
நான் யார்கிட்ட பேசினா உனக்கு என்ன? நீ ஏன் ஐ லவ் யூ சொன்னா சொல்லுடி என்று மீண்டும் மீண்டும் அர்ச்சனாவை தரக்குறைவாக பேசிக் கொண்டிருக்க இவர்கள் இருவரின் சண்டையில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் எல்லாருமே நிக்சனை பெரிதாக கேள்வி கேட்கவில்லை. மாறாக அர்ச்சனாவை தான் அமைதியாக இருக்க சொல்லிக் கொண்டிருந்தனர். அதோடு இந்த பிரச்சனை ஆரம்பிக்கும் போது விஷ்ணு மற்றும் நிக்சன் இருவரும் தான் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது விஷ்ணு வினிஷாவை பற்றி கேட்ட கேள்விக்கு அர்ச்சனா கைதட்டி இருக்கிறார். அதனால் தான் பிரச்சனை அர்ச்சனா மற்றும் நிக்சனுக்கு இடையே மாறி இருக்கிறது. அதனால் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் எல்லோருமே நீ செய்ததுதான் தவறு. இதில் எதற்கு நீ இடையில் வந்தா? என்கிற தோரணையில் அர்ச்சனாவிடம் பேசிக் கொண்டிருந்தனர்.
அதோடு விஷ்ணுவிடமும் நீதான் வினுஷா விஷயத்தை ஆரம்பித்தாய், எதற்கு எப்ப பார்த்தாலும் அந்த பிரச்சனையே இழுத்துகிட்டு இருக்கீங்க என்று விசித்திரா கேட்க இதனால் கோபமான நிக்சன் இனி வினுஷாவை பற்றி யாராவது பேசினால் சொருகிடுவேன் என்று கத்தினார். இதனால் கடுப்பான விஷ்ணு எங்க சொருகு பார்க்கலாம், என்று நிக்சனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதோடு தினேஷும் அது என்ன வார்த்தை சொருகிடுவேன் என்று சொல்றியே என்று கேள்வி கேட்க அதற்கு பிறகு நிக்சன் நான் உங்களை சொல்லவில்லை என்று அடங்கிப் போனார். அதோடு தினேஷ் அண்ணா நான் உங்ககிட்ட பேசல நீங்க எல்லாரும் குரூப் சேர்ந்து வருகிறீர்களா என்று புலம்பிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் இந்த வாரம் என்ன பஞ்சாயத்து பண்ண போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications