வனிதாவிற்கு டப் கொடுத்த பாலா... மீண்டும் எழுந்த ஜூலி.. சூடுபிடிக்கும் அல்டிமேட் ஆட்டம்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நடக்கும் டாஸ்க்குகளால் தற்போது விருவிருப்பு கூடியிருக்கிறது.
கடந்த வாரம் ட்ரெண்டிங் பிளேயராக வந்த வனிதாவிற்கு டப் கொடுக்கும் விதமாக இந்த வாரம் பாலா கலக்கிக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

கொளுத்திப் போட்ட பிரபலம்
பிக் பாஸ் நிகழ்ச்சியை போன்று பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் விருவிருப்பு கூட்டுவதற்காக தினமும் போட்டியாளர்களுக்குள் பஞ்சமில்லாமல் சண்டைகளை பத்த வைத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் அறிமுகமாகி முதல் வாரத்தில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறி இருக்கிறார். சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்த வரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கண்டென்ட் அதிகமாகக் கொடுக்கிறேன் என்று இவர் நன்றாகவே கொளுத்திப் போட்டு வந்தார்.

விளையாட்டை தொடங்கிய பாலா
முதல் வாரத்தில் அதிகமான ரசிகர்கள் வனிதா அல்லது அபிநய் தான் வெளியே செல்வார்கள் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இவர்கள் இருவரும் பாதுகாக்கப்பட்டு சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த நிலையில்தான் கடந்த வாரத்தில் ட்ரெண்டிங் பிளேயராக வனிதா இருந்துள்ளார் என்று அவருக்கு அவார்டு மற்றும் பேட்ச் கொடுத்து சிறப்பு படுத்தியுள்ளது பிக்பாஸ். இதை பொறுத்துக் கொள்ளாத பாலா தன்னுடைய விளையாட்டை தொடங்கியிருக்கிறார். வனிதா இப்படி விளையாடினால் நான் அவருக்கு மேலே விளையாடுவேன் என்று நிரூபிக்கும் விதமாக தான் தற்போது பாலாவின் செயல்பாடு இருந்து வருகிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்
ட்ரெண்டிங் பிளேயர் எனும் பட்டம் கொடுக்கப்பட்ட பேட்ச் முதலியவற்றை நேற்று நடந்த திருடன் போலீஸ் விளையாட்டில் சல்லி சல்லியாக பாலா உடைத்துவிட்டார். இதனால் காண்டான வனிதாவே இந்த வாரம் ட்ரெண்டிங் பிளேயராக வருகிறாரா அல்லது அவரை சீண்டிப் பார்த்த பாலா ட்ரெண்டிங் பிளேயர் ஆக வருகிறாரா? என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்தநிலையில் ஜூலி கடந்த சீசனில் விளையாடிய விளையாட்டிருக்கும் தற்போது இந்த நிகழ்ச்சியில் விளையாடுவதற்கும் நிறையவே மாற்றம் இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் சக போட்டியாளர்கள் இவரை அதிகமாக டார்கெட் செய்து வருகின்றனர்.

மீண்டும் எழுந்த ஜூலி
யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜூலி தற்போது தன்னுடைய விளையாட்டில் கவனமாக விளையாடி வருவதைப் பார்க்கும்போது ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நன்றாக வரவேற்பு அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் தன்னுடைய பழைய நிலைக்கு ஜூலி திருப்பியுள்ளார். ஒரு சில நாட்களாக போட்டியாளர்களின் டார்கெட்டால் சோர்ந்து போயிருந்த ஜூலியின் மிரட்டலான ஆட்டம் நேற்றைய எபிசோடில் மீண்டும் காணப்பட்டதை பார்க்கும்போது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications