பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு எல்லாமே மாறி போச்சு..ராஜூவை பற்றி புலம்பிய தாமரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கும் தாமரைச்செல்வி ராஜூவை பற்றி பேசியது வைரலாக பரவி வருகிறது.

பிக்பாஸ் ஐந்தாவது சீசன் முடிவடைந்ததும் அதில் இருந்தவர்கள் பலர் முற்றிலுமாக மாறி போய்விட்டார்கள் என தாமரை குற்றம் சாட்டி இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்

விஜய் டிவியில் சமீபத்தில்தான் முடிவடைந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டிக்காக கலந்து கொண்டு அவர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பிடித்த தாமரை செல்வி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் அறிமுகமாகும் போது ஆரம்பத்தில் யாருக்கும் இவர் யாரென்றே தெரியாமல் இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல தன்னுடைய வெள்ளந்தியான பேச்சால் அனைவருடைய மனதிலும் இடத்தை பிடித்துவிட்டார். ரசிகர்கள் மட்டுமில்லாமல் சக போட்டியாளர்கள் இவரிடம் அனுசரணையாக பாசமாக நடந்து கொண்டிருந்தனர்.

வெள்ளந்தியான கேரக்டர்

வெள்ளந்தியான கேரக்டர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் தாமரை, ராஜு, பிரியங்கா, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, வருண் போன்றவர்களுடன்தான் நெருங்கி பழகி வந்தார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு பலர் இவரை கண்டு கொள்ளவே இல்லை என்பது இவருடைய வருத்தமாக இருந்து வருகிறது. தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவர் தன்னுடைய மனக்கவலையை கொட்டியிருக்கிறார். இந்த வீடியோக்களை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். ஆரம்பத்தில் பிரியங்கா தான் தன்னிடம் அதிகமாக பாசமாக இருந்தார். ஆனால் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு ஒரு முறை கூட போன் செய்து பேச வில்லை என்று பீல் பண்ணி இருந்தார்.

ராஜுவின் எதிர்பாராத செயல்பாடு

ராஜுவின் எதிர்பாராத செயல்பாடு

அதுமட்டுமல்லாமல் ராஜுவை தன்னுடைய மூத்த மகனாக தான் தாமரைச்செல்வி நினைத்து வந்தாராம். வீட்டில் இருக்கும்போது அதனால்தான் அவரோடு அதிகமாக நேரத்தை செலவிட்டு கொண்டிருந்தாராம். அவருக்காக பல்வேறு வேலைகளையும் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில் ராஜுவும் அவரிடம் பாசமாகத்தான் இருந்தாராம். ஆனால் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பிறகு அவரிடம் பேசவே இல்லையாம். இது அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்ததால், எல்லாரும் நன்றாக இருந்தவர்கள் தானே இப்படி ஏன் செய்கிறார்கள் என்று ஒரு சில நாட்கள இவர் தூங்காமல் நினைத்துக்கொண்டு வருந்தியுள்ளாராம். அப்போது இவருடைய கணவர் கூட இவரை மனநிலை சரியில்லாமல் ஆகிவிட்டதா என்று நினைத்து பயந்து உள்ளாராம்.

எல்லாருமே இப்படி தானா

எல்லாருமே இப்படி தானா

ஆனால் அக்ஷரா, வருண், இமான் அண்ணாச்சி போன்றோர் இவரிடம் வெளியே வந்த பிறகும் பாசமாக பேசிக்கொண்டு இருந்தார்களாம். அது கொஞ்சம் ஆறுதலாக இருந்ததாம். பாசம் ஒருவர் மீது வைத்து விட்டால் அவ்வளவு விரைவில் அதை எடுக்க முடியாது. அதனால் தான் இவர்களுடைய மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறியிருக்கிறார். வருத்தத்தோடு பேசிக்கொண்டிருந்த தாமரைக்கு ஜூலி ஆறுதல் கூறி இருக்கிறார். எல்லோரும் இப்படித்தான் அருகில் இருக்கும்போது நம் மீது பாசத்தை பொழிவார்கள், விலகிச் சென்றதும் கண்டுகொள்ளாமல் அவர்களுடைய வேலையில் கவனத்தை செலுத்த தொடங்கிவிடுவார்கள். அதற்காக நான் பீல் பண்ண கூடாது என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே ஜூலி கூட சினேகன் முதல் சீசனில் இருக்கும்போது தன்னை தங்கச்சி என்று உரிமையாக பாசத்தை பொழிந்ததாகவும் வெளியே சென்ற பிறகு ஒரு முறை கூட தன்னுடைய போனை எடுக்கவில்லை எனவும் பொது இடத்தில் பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் கிளம்பி விட்டார் என்றும் கூறியிருக்கிறார். அதனால்தான் ஜூலி கூட இந்த வார்த்தையை சொன்னாரோ என்னவோ என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+