பிக்பாஸ் 8: இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் இவர்தானா? போன சீசன் போட்டியாளரின் தந்தை போஸ்ட்
சென்னை: பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இன்றைய தினம் வெளியேற போகும் நபர் யார் என்பது குறித்து ஏற்கெனவே பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளரின் தந்தை ஒரு பதிவை போட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
குழாய் அடி சண்டை முதல் அடிதடி வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சீசன் 8 போகிறது. இதில் ஆண் போட்டியாளர்கள், பெண் போட்டியாளர்கள் என பிரித்து வீட்டின் நடுவே கோடு போடப்பட்டிருக்கிறது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் பெரும்பாலானோர் மக்களுக்கு தெரிந்த முகங்கள்தான். முதல் போட்டியாளராக வந்த ரவீந்தர் முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார் (சாச்சனா வெளியேற்றப்பட்டாலும் அவர் மீண்டும் வந்துவிட்டார்).
இரண்டாவது வாரத்தில் நடிகர் அர்னவ் வெளியேற்றப்பட்டார். வந்த போதும் சரி போகும் போதும் சரி, அர்னவ், விஜய் சேதுபதியிடம் திட்டு வாங்கிக் கொண்டுதான் சென்றார். இந்த சீசனில் 9 பெண்கள், 9 ஆண்கள் என இருந்தனர். 9 ஆண் போட்டியாளர்களில் ரவீந்தர், அர்னவ் ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டுவிட்டார்கள்.
மீதமுள்ளவர்கள் 7 பேர்தான். அது போல் பெண்களில் 9 போட்டியாளர்களும் இருக்கிறார்கள். இந்த முறையும் நாமினேஷன் ப்ரீ டிக்கெட்டை பெண்கள் பெற்றுவிட்டனர். இதனால் அவர்கள் நினைத்தால் நாமினேஷனில் இருந்த ஒருவரை காப்பாற்றலாம். எனினும் இந்த முறை பெண் போட்டியாளர்கள்தான் அதிகம் பேர் நாமினேஷனில் உள்ளார்கள்.
இந்த வாரம் முத்துக்குமரன், அருண், சவுந்தர்யா, அன்ஷிதா, சத்யா, தர்ஷா குப்தா, ஜாக்குலின், பவித்ரா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். நாமினேட் ஆகியுள்ள 7 போட்டியாளர்களில் ஜாக்குலின், அன்ஷிதா அல்லது தர்ஷா குப்தா ஆகியோரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் நாமினேஷன் ப்ரீ டிக்கெட்டை பெண்கள் பெற்றிருந்ததால், இந்த வாரம் யார் காப்பாற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. வாக்குகளின் அடிப்படையில் பவித்ரா கடைசியில் இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் அன்ஷிதா, தர்ஷா, பவித்ரா, ஜாக்குலின் ஆகிய மூவரில் யார் சேவ் செய்யப்படுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் பவித்ரா சேவ் செய்யப்பட்டுள்ளார்.
பவித்ராவுக்கு அடுத்து குறைந்த வாக்குகளை தர்ஷா குப்தா, அன்ஷிதா பெற்றிருந்ததால் இருவரில் ஒருவர் நாமினேட் செய்யப்படுவார்கள் என தெரிகிறது. இந்த நிலையில் தர்ஷா குப்தாதான் எலிமினேட் ஆகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அது போல் கடந்த பிக்பாஸ் சீசன் 7 இல் போட்டியாளரான ஐசுவின் தந்தை ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார். அதில் தைரியமாக இரு தர்ஷா. உன் எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications