“கன்பியூசன்”.. சீமானுக்கு பிக்பாஸ் அஜீம் கொடுத்த “கிஸ்” - ஒரே சிரிப்பு! இவரு திமுகவா? நாம் தமிழரா?
சீமானுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிக்பாஸ் வெற்றியாளர் அஜீம் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகரும் பிக்பாஸ் வெற்றியாளருமான அஜீம், முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. திமுக இளைஞரணி பொறுப்பில் அஜீம் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது அரசியல் நிலைபாடும் விவாத பொருளாகி உள்ளது.
சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பார்க் பிளாசாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு பாராட்டு விழா நடத்தும் நிகழ்ச்சி யூடியூப் சேனலின் சார்பில் நடத்தப்பட்டது.
"செந்தமிழனுக்கு பாராட்டு விழா" என்ற பெயரில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சீரியல் நடிகரும், பிக்பாஸ் வெற்றியாளருமான அஜீம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

சீமானுக்கு முத்தம் கொடுத்த அஜீம்
இதில் நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பேச்சாளர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஜீம் மேடையில் சீமானை முத்தம் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தில் சீமான் சிரித்தபடியே அஜீமை கட்டிப்பிடித்தபடி நின்றுகொண்டு இருக்கிறார்.

வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட அஜீம்
கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த பிக்பாஸ் 6 வது சீசனில் யாரும் எதிர்பாராத வகையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் சீரியல் நடிகரான அஜீம். இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியும், பத்திரிகையாளருமான விக்ரமனே வெற்றிபெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அஜீம் வெற்றிபெற்றது தமிழ்நாடு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அஜீம் பேச்சு
சக மனிதரை, பெண்களை, திருநங்கைகளை தரக்குறைவாக விமர்சித்து பலரையும் இழிவுபடுத்தி வந்த அஜீமை பிக்பாஸ் வெற்றியாளராக அறிவித்தது தவறான முன் உதாரணமாக இருக்கும் என்று பலரும் ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்தனர். "எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே" என்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக நாளிலேயே கமல்ஹாசன் முன்னிலையில் இனப்பெருமை பேசி கமல்ஹாசனால் ஆட்சேபிக்கப்பட்டார்.

நாம் தமிழர் ஆதரவாளரா?
ஆனாலும், பிக்பாஸ் வீட்டிற்குள் இதே கருத்தை அவர் தெரிவித்து வந்தார். சீமானும் ஒரு மேடையில் அஜீம் பிக்பாஸில் பேசியதை சுட்டிக்காட்டினார். எனவே அஜீம் பேசும் வசனங்கள், தமிழ் குறித்த கருத்துக்களை வைத்து பார்க்கையில் இவர் சீமானின் ஆதரவாளர் என்றும், நாம் தமிழர் கட்சியில் இருப்பதாகவும் பலர் நினைத்தனர்.

உதயநிதி பெயர் சொன்ன அஜீம்
ஆனால், சீமானால் கடுமையாக விமர்சிக்கப்படும் திமுகவில் இளைஞரணி பொறுப்பில் அஜீம் இருப்பதாக செய்திகள் பரவின. அதை உறுதிபடுத்தும் வகையில் அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி கிருத்திகா உதயநிதி பெயரில் பல இடங்களில் பயன்படுத்தி வந்தார் அஜீம்.

ப்ரீஸ் டாஸ்க்
70 வது நாளுக்கு பிறகு ஃப்ரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களை உறவினர்கள் நண்பர்கள் பார்க்க வரும்போது தன்னை உதயநிதி ஸ்டாலின் பார்க்க வரவேண்டும் என அஜீம் விருப்பம் தெரிவித்ததாக சக போட்டியாளரான ஏடிகே தெரிவித்தார். ஆனால், உதயநிதி ஸ்டாலின் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவில்லை. அஜீமின் தம்பியும் நண்பருமே உள்ளே சென்றனர்.

நாம் தமிழருக்கு சாய்கிறாரா?
இப்படி திமுகவின் ஆதரவாளராக தன்னை வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட அஜீம், திமுகவையும் உதயநிதி ஸ்டாலினையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் சீமானை பாராட்டும் விழாவில் பங்கேற்று அவருக்கு முத்தம் கொடுத்தது விவாத பொருளாகி உள்ளாது. பிக்பாஸ் நிகழ்ச்சியின்போதும் முடிந்த பிறகும் திமுகவினர் தனக்கு ஆதரவு தெரிவிக்காததால் அஜீம் நாம் தமிழர் பக்கம் சாய்வதாக நெட்டிசன்கள் தெரிவித்து உள்ளனர்.
-
யாருக்கு ஓட்டு போட போறீங்க! வாரிசு அரசியலுக்கா? சீமான் சட்டசபைக்கு போகனும்! சீனுக்குள் வந்த சேரன்! -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
Land Rover Defender கான்வாயில் வரும் ஸ்டாலின் பெயரில் ஒரு வாகனம் கூட இல்லை! சீமான் சொத்து எவ்வளவு? -
ஒரே ஒரு தோட்டா.. காட்டி விடுவேன் டாட்டா.. சமூக விரோதிகளுக்கு சீமான் வார்னிங் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications