Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாஸ்மாக்.. ஸ்டாலினையே "டேக் செய்த" தமிழ் பிக்பாஸ் பிரபலம்.. ஆனா இப்படி சிக்கிட்டாரே பாலாஜி முருகதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை அரசியலுக்கு இழுக்காதீர்கள். நீங்கள் தாங்க மாட்டீங்க என பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் ஆவேசமடைந்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி முருகதாஸ். இவர் அந்த சீசனில் ஆரியுடன் கடுமையான மோதல் போக்கை கொண்டிருந்தார். இந்த சீசனில் விஜே அர்ச்சனா , இவரை தனது மகன் போன்றவர் என கூறி சோமு, நிஷா உள்ளிட்டோரை வைத்து அன்பு டீம் என்ற ஒரு குரூப்பிஸம் செய்தார். இதனால் அவர் பல விமர்சனங்களுக்குள்ளானார்.

அது போல் ஆரியை தேள் கொட்டும் வார்த்தைகளால் பேசி ரசிகர்களின் அவச்சலொல்லுக்குள்ளானார். பல நேரங்களில் கமல்ஹாசனும் இவரை கண்டித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் பலருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

சினிமா வாய்ப்புகள்

சினிமா வாய்ப்புகள்

அந்த வகையில் பாலாஜிக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் தனது தயாரிப்பில் பாலாஜி நடிக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் அந்த படம் தொடங்கப்படவே இல்லை. இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் ஒரு ட்வீட் போட்டு மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ட்விட்டர்

ட்விட்டர்

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வரை டேக் செய்து நேற்று கூறியிருப்பதாவது: தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். இது ஏராளமான உயிர்களை அழித்துள்ளது. ரம்மியை ஒப்பிடும் போது குடியால் அழிந்தவர்கள்தான் அதிகம் என பதிவு செய்திருந்தார். இவருடைய இந்த ட்வீட்டிற்கு கடுமையான விமர்சனங்கள் வந்தன.

ட்வீட்

ட்வீட்

அதன் பிறகும் ஒரு ட்வீட்டை போட்டுள்ளார். அதில் குடியால் என்னை போன்றவர்களில் சிலர் அனாதையாகி உள்ளனர். ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தான் டாஸ்மார் கடைகளை மூடச் சொல்கிறேன். மேலும் என்னை தயவு செய்து அரசியலுக்கு இழுக்காதீர்கள். அவ்வாறு இழுத்தால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என பதிவு செய்துள்ளார்.

சர்ச்சை கருத்து

சர்ச்சை கருத்து

அவருடைய இந்த பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முருகதாஸ் இத்தனை அட்வைஸ் செய்துள்ள நிலையில் அவருடைய பழைய இன்ஸ்டா போஸ்டை எடுத்து போட்டு நெட்டிசன்கள் வறுக்க ஆரம்பித்துவிட்டனர். அதில் ஒரு நீச்சல் குளத்தில் குளிக்கும் பாலாஜி, பீரை எடுத்து தலையில் ஊற்றுகிறார். இந்த புகைப்படத்தை போட்டு என்ன பிரதர் இது என கேட்டு வருகிறார்கள். அதாவது குடி குடியை கெடுக்கும் என கூறிவிட்டு இவரே பீரில் குளிப்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் அனைவருடைய கேள்வியாக இருக்கிறது.

சர்ச்சை கருத்து

சர்ச்சை கருத்து

அவருடைய இந்த பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. முருகதாஸ் இத்தனை அட்வைஸ் செய்துள்ள நிலையில் அவருடைய பழைய இன்ஸ்டா போஸ்டை எடுத்து போட்டு நெட்டிசன்கள் வறுக்க ஆரம்பித்துவிட்டனர். அதில் ஒரு நீச்சல் குளத்தில் குளிக்கும் பாலாஜி, பீரை எடுத்து தலையில் ஊற்றுகிறார். இந்த புகைப்படத்தை போட்டு என்ன பிரதர் இது என கேட்டு வருகிறார்கள். அதாவது குடி குடியை கெடுக்கும் என கூறிவிட்டு இவரே பீரில் குளிப்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் அனைவருடைய கேள்வியாக இருக்கி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+