புரமோஷனுக்காக ரூ 2.5 லட்சம் கொடுத்துட்டு வந்திருக்கேன்.. பகீர் தகவலை சொன்ன பிக்பாஸ் போட்டியாளர்
சென்னை: என்னங்க இது அநியாயம் புரமோஷனுக்காக மட்டும் ரூ 2.5 லட்சம் செலவு செய்துள்ளதாக பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் சொன்ன தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் தங்கும் போட்டியாளர்களில் கடைசி வரை வீட்டில் யார் தங்குகிறார்களோ அவர்தான் போட்டியின் வெற்றியாளராவார்.
ஒவ்வொரு முறை எவிக்ஷனுக்கு வரும் போட்டியாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பர். அவர்களில் யாருக்கு வாக்குகள் குறைவாக இருக்கிறதோ அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்.

மக்கள் மனம்
இதனால் மக்கள் மனதில் இடம்பிடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து போட்டியை சேஃப்பாக விளையாடுவதாக சொல்லப்படுகிறது. அதே வேளையில் இந்த நிகழ்ச்சியில் என்னதான் புகழ் பெற்றவர்கள் உள்ளே வந்தாலும் அவர்களுடைய நடவடிக்கைகளை வைத்துதான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் ஓவியா
இப்படித்தான் பிக்பாஸ் ஓவியாவுக்கு ஆர்மியை உருவாக்கும் அளவுக்கு ரசிகர்கள் கிடைத்தார்கள். இதன் பின்னர் வந்த சீசன்களில் கூட சில போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கினாலும் ஓவியாவுக்கு கிடைத்த மக்கள் செல்வாக்கு வேறு யாருக்குமே கிடைக்கவில்லை என்பதை மறுக்கவே முடியாது. மேலும் சிலர் பணம் கொடுத்து தங்களை பிரமோஷன் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 6
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6-இல் கலந்து கொண்டுள்ள ராம் ராமசாமி, தனது பிரமோஷனுக்காக ரூ 2.5 லட்சம் செலவழித்துள்ளதாக சக போட்டியாளர்களிடம் தெரிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. முந்தைய சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களும் இப்படித்தான் பணம் கொடுத்து பிரமோஷன் செய்தனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாக்குகளுக்கு என்ன பலன்
இந்த சீசனில் போட்டியாளர்கள் அனைவருமே ஒவ்வொரு விதமாக இருக்கிறார்கள். ராபர்ட் மாஸ்டர் கமலிடம் தான் ஒரு சிங்கிள் என கூறிவிட்டு தனக்கு 22 வயதில் காதலி இருப்பதாக சக போட்டியாளரிடம் சொல்கிறார். அது போல் ராம் காசு கொடுத்து பிரமோஷன் செய்வதாக கூறுகிறார். இதனால் மக்களின் வாக்குகளுக்கு என்ன பலன் இருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications