இங்க பாருங்கய்யா... இந்தப் பொண்ணு அப்பளம்லாம் விக்கிது!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜூலி தற்போது அப்பள விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.
Recommended Video

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜூலி தற்போது அப்பள விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டு உலக தமிழர்களிடையே பிரபலமானார் ஜூலி. இதனை காரணமாக வைத்து விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
நிகழ்ச்சியின் முதல் நாளிலேயே தன்னை கட்டிப்பிடிக்க யாருமே இல்லை என நடிகர் ஸ்ரீயிடம் புலம்பி ஒரே நாளில் ஒட்டுமொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் செய்த காரியங்கள் எல்லாம் தமிழக மக்களிடையே அவர் மீது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

ஜூலி என்றாலே போலி
குறிப்பாக ஓவியாவை காயத்ரி ரகுராமுடன் சேர்ந்துகொண்டு அவர் படுத்தியபாடு மக்களிடையே அவர் மீது உச்சக்கட்டத்தை ஏற்படுத்தியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி என்றாலே போலி என்ற பிம்பம் தோன்றியது.

கழுவி ஊற்றப்படும் ஜூலி
சமூக வலைதளங்களில் ஜூலியை வைத்து ஏராளமான மீம்ஸ்களும் ட்ரோல் வீடியோக்களும் வெளியிடப்பட்டது. ஜூலி டிவிட்டரில் வாய்திறந்தாலே அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

டிவியில் தொகுப்பாளர்
சினிமாவில் நடிக்க வேண்டும், தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட ஜூலிக்கு தொகுப்பாளர் வாய்ப்பு கொடுத்தது கலைஞர் தொலைக்காட்சி. அண்மையில் அவர் நடிகர் விமலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியானது.

அப்பளம் விளம்பரத்தில் ஜூலி
இந்நிலையில் ஜூலி அப்பளம் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். கணவர், மாமனார், மாமியார் சகிதமாக எடுக்கப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில் ஜூலிதான் மருமகள்.

அந்த 5 செகன்ட் டயலாக்
அதில் ஜூலியின் ஃபேவரைட் டயலாக்கான அந்த '5 செகன்ட்' என்ற டயலாக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜூலி மீதான பார்வை அப்பளத்தின் மீதும் விழாமல் இருந்தால் சரி..
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications