"வேம்பையர் ஃபேசியல்.."அழகி டூ பேரழகியான பிக்பாஸ் ஜூலி.. இது வேற லெவல்!
சென்னை: பிக்பாஸ் ஜூலி தனது தோலின் நிறத்தை மாற்ற அழகு சிகிச்சை செய்திருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நடிகை, மாடல் அழகிகள் முதல் குடும்பத் தலைவிகள் வரை அழகு என்பதில் அதிக அக்கறை கொண்டவர்களாக உள்ளனர். இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டும் அழகு சிகிச்சைகளை செய்வது ஒரு வகை.
தங்கள் வசதிக்கேற்ப அழகு நிலையங்களை நாடி அங்கும் தங்களுக்கு தேவையான சிகிச்சைகளை செய்து கொள்கிறார்கள். நடிகைகள், மாடல்கள் உள்ளிட்டோர் அழகு சிகிச்சை, தோல் சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

ஸ்ரீதேவி
அந்த வகையில் ஸ்ரீதேவி, காதல் பட நடிகை சந்தியா உள்ளிட்டோர் மூக்கை சிகிச்சை செய்து கொண்டார்கள். அது போல் ஸ்ருதிஹாசனின் மகளும் தனது முக அமைப்பை சீரமைத்துக் கொண்டார். இது போல் நிறைய நடிகைகளும் மாடல்களும் தங்கள் அழகில் அக்கறை கொள்கிறார்கள்.

உடல் அமைப்பு
அது போல் உடல் அமைப்பிலும் சில மாற்றங்களை செய்து கொள்கிறார்கள். இதற்கு ஆயிரக்கணக்கு முதல் லட்சக்கணக்கு வரை செலவ செய்கிறார்கள். காசு கொடுத்தால் போதும் தேவதை போல் ஆகி விடலாம் என்ற நிலை உள்ளது. அந்த வகையில் பிக்பாஸ் புகழ் ஜூலி தனது தோலின் நிற மாற்றத்திற்கு ஒரு சிகிச்சை அளித்துள்ளார்.

ரத்த சிகிச்சை
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கான வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒரு ஃபேசியல் சென்டருக்கு செல்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சை குறித்து விளக்கமளிக்கப்படுகிறது. அந்த சிகிச்சைக்கு பெயர் vampire facial ஆகும். தங்கள் உடலில் உள்ள ரத்தத்தை எடுத்து அதை ஒரு செயல்முறை செய்கிறார்கள்.

கோல்டன் புளூயிட்
அதை கோல்டன் புளூயிட் என்கிறார்கள். அதன் மூலம் தோலின் நிற மாற்றத்திற்கு சிகிச்சை அளிக்கிறார்கள். போகும் போது முகத்தில் பொலிவு இல்லாமல் செல்லும் ஜூலி இந்த சிகிச்சைக்கு பிறகு அட்டகாச அழகில் வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். இந்த சிகிச்சை மாஜிக் போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவரை போல் பல நடிகைகளும் மாடல்களும் முகத்திற்கு சிகிச்சை, கொழுப்பை குறைக்கும் சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள். சிலருக்கு கைகூடுகிறது. சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. பல் சிகிச்சை சென்ற கன்னட நடிகையின் முகம் வீங்கிய சம்பவம், ரைசாவின் முகம் வீங்கியது உள்ளிட்டவை உதாரணமாக சொல்லலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications