பிக்பாஸ் சீசன் 7ல் இந்த நடிகையா?.. அவரையே அடிக்க பாய்ந்தவராயிற்றே.. அப்போ களைகட்டுமா வீடு?
சென்னை: பிக்பாஸ் சீசன் 7 தொடங்கவுள்ள நிலையில் அந்த ஆடிஷனில் 5 பிரபலங்கள் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் யார் என்பதை பார்ப்போம்.
பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 2017 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 6 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட நபர்கள் ஒரே வீட்டில் இருப்பார்கள். அவர்களின் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்படும். போன், டிவி எதுவும் இருக்காது.

அவர்களை 100 நாட்களுக்கு மேல் இருக்க வைப்பார்கள். அவ்வாறு 100 நாட்கள் நேயர்களின் மனதை கவர்ந்து யார் நியாயமாக விளையாடுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். இந்த நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் கோலாகலமாக நடைப்பெற்றது.
இந்த 6ஆவது சீசனின் போது கமல்ஹாசனுக்கு உடல்நிலை சரியில்லாததால் சில வாரங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார் ஆட்டிடியூட் காண்பித்தாலும் அன்றைய தினம் கமல்ஹாசன் கிழிகிழி என கிழித்துவிடுவார். வார நாட்களில் எந்த போட்டியாளராவது மக்கள் முகம் சுளிக்கும் அளவுக்கு நடந்து கொண்டால் அந்த வார இறுதியில் சம்பவம் இருக்கிறது என்று அர்த்தம்.
இதற்காகவே சனி, ஞாயிற்றுகிழமைகளில் நிறைய பேர் பிக்பாஸ் பார்ப்பார்கள். அதில் கமல்ஹாசன் சில நேரம் அரசியலும் பேசுவார். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த வகையில் விரைவில் 7ஆவது சீசன் தொடங்கப்படவுள்ளது.
இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இதற்காக தனது சம்பளத்தை ரூ 130 கோடியாக உயர்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆடிஷன் நடந்து வருவதாக தெரிகிறது. அதில் 5 பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் யாரென்றால் ரேகா நாயர், மாகபா ஆனந்த், உமா ரியாஸ்கான், விஜே பாவனா, கே.பி.ஒய்.சரத் ஆகியோரிடம் ஆடிஷன் நடந்ததாக தெரிகிறது. இன்னும் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உமா ரியாஸ்கான் மகன் ஷாரீக் ஹுசைன் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேகா நாயர் இரவின் நிழல் படத்தில் ஒரு காட்சியில் நடித்ததற்காக சர்ச்சைக்குள்ளானார். அவரை பயில்வான் ரங்கநாதன் ஆபாசமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் ஒரு முறை திருவான்மியூர் கடற்கரையில் பயில்வானை கண்டதும் ரேகா நாயர் செருப்பை கழற்றி அடிக்க பாய்ந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications