பிராமிணா? பிக்பாஸில் ஜாதி கேட்ட போட்டியாளர்.. கொந்தளித்த மாயா! இவரா இப்படி.. கண்டிப்பாரா கமல்ஹாசன்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர் தனது சாதியை பற்றி கேட்டதாக சக போட்டியாளர் மாயா தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 7 வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு தொடங்கி 25 நாட்களின் எபிசோடுகள் வெளியாகி இருக்கின்றன. முந்தைய சீசன்களை விட இந்த சீசன் சுமாராக இருப்பதாகவே ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். பலரும் இயல்பாக இல்லாமல் விளையாட்டு தந்திரத்துடனே நடந்துகொள்வதாகவும், உண்மையாக இல்லை என்றும் விமர்சனங்கள் வருகின்றன.

இந்த போட்டியில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து உள்ள நடிகை மாயா கிருஷ்ணனும் இதில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கெடுத்து இருக்கிறார். அவரது நடவடிக்கைகளும் பிக்பாஸ் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டே வருகிறது. அதே நேரம் யாரையாவது உடல் ரீதியாக ஒருவர் விமர்சித்தால் அதை முதல் ஆளாக கண்டிக்கவும் செய்கிறார் மாயா. இந்த சூழலில்தான் சக போட்டியாளரான மணி மீது மாயா முன் வைத்த குற்றச்சாட்டுகள் விவாத பொருளாகியுள்ளது.
நடன கலைஞரான மணி, இதற்கு முந்தைய பிக்பாஸ் சீசன்களின் போட்டியாளர்களை கேலி செய்து பாடல் தயாரித்து விஜய் டிவியில் நடனமாடியதன் மூலம் புகழ்பெற்றவர். இவரை மிகவும் பிற்போக்குவாதி என்று ஓபன் நாமினேசனின்போது மாயா விமர்சித்து இருந்தார். சாதி, மத, பாலின ரீதியாக பாகுபாடு பார்த்து ஒடுக்குபவர்களே பிற்போக்குவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படி இருக்க மணி என்ன செய்தார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கான விடையை ஐசுவிடம் பேசுபோது மாயா தெரிவித்தார்.

அதில், "என்னிடம் சாதி பற்றி மணி கேட்கிறான். இது எவ்வளவு பெரிய தப்பு?" என மாயா கூறினார். இதை கேட்ட பார்வையாளர்களே மிகவும் அதிர்ச்சியடைந்து இருப்பார்கள். ஏனெனில் முந்தைய எபிசோடுகளில் மணி அப்படி பேசியதை யாரும் பார்த்திருக்கவில்லை. 24 மணி நேர லைவிலும் காட்டப்பட்டதாக தெரியவில்லை. கோட் வேர்ட் மூலமாகவும், மைக்கை கழற்றி வைத்துவிட்டு பேசி இருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சாதி, மதம் பற்றி பேசினால் தமிழ் ரசிகர்கள் நிச்சயம் ஏற்க மாட்டார்கள்.
இந்த நிலையில் அந்த நாள் எபிசோடிலேயே ஜோவிகாவிடம் என்ன நடந்தது என மணி விவரித்தார். "மாயா சிக்கன் கிரேவி மட்டும் ஊற்றி, கறி சாப்பிடாமல் இருந்தார். எனவே கறி சாப்பிடாததால் நீ பிராமிணா என கேட்டேன். இப்படி பேசாதே.. ரொம்ப தப்பு என மாயா கூறிவிட்டு சென்றார்." என மணி தெரிவித்தார். மணி இதை இயல்பாக நினைத்தாலும் அப்படி பேசியது தவறு என்பதே பலரது கருத்தாக இருக்கிறது. சைவம் சாப்பிடுவதாலேயே அவரை இந்த சாதி என்று கருதுவதும் புரிதல் குறைபாடுதான்.

காரணம், உடல் நலம் அல்லது வேறு பல காரணங்களுக்காக பல்வேறு தரப்பினர் அசைவத்தை தவிர்க்கிறார்கள். இப்படி ஆளாளுக்கு சாதி என்ன என்று கேட்க ஆரம்பித்தால் தமிழ்நாட்டுக்கு என்று தனித்த அடையாளமாக இருக்கும் சமூக நீதி என்ன ஆவது ஆவேசமாக கருத்திட்டு வருகிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள். பல லட்சக்கணக்கான மக்கள், சிறுவர்கள் பார்க்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், சாதி, மதம், பாலினம் தொடர்பான பேச்சுக்கள், உருவ கேலிகள், கெட்ட வார்த்தைகளை பேசுவதை கமல்ஹாசன் கண்டிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications