பிகில் டூ பேட்ட வரை.. 5 நாள்.. டெய்லி ஒரு பிளாக்பஸ்டர்.. சன் டிவியின் சூப்பர் பொங்கல்!
சென்னை: அடடா என்னய்யா இது.. மத்த சேனலை பார்க்கிறதா வேண்டாமா என்று மத்த டிவியெல்லாம் புலம்பும் வகையில், சன்டிவியில் பொங்கல் பண்டிகைக்கு சிறப்புப் பட அணிவரிசை மலைக்க வைக்கிறது. டெய்லி ஒரு பிளாக்பஸ்டர் படம் போடப் போறாங்களாம்.
இந்த வருடம் பொங்கலுக்கு நிறைய லீவு. மக்கள் இப்பவே ஏகப்பட்ட பிளான்களை போட்டு வைத்து வருகின்றனர். இந்த நிலையில் டிவி சானல்களும் கூட பொங்கலையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மக்களை மகிழ்விக்க ரெடியாகி வருகின்றன.
சன் டிவி எப்பவுமே மற்றவர்களை மிஞ்சி நிற்பது வழக்கம். இந்த முறையும் அதற்கு ஒரு குறைவும் இல்லை.

எல்லாமே புதுசு
இந்த வருட பொங்கலுக்கு புத்தம் புதுப் படங்களுடன் சன் டிவி மக்களை அதிர வைக்கப் போகிறது. அதை விட முக்கியமானது என்னவென்றால் அவர்கள் போடப் போகும் புதுப் படங்கள் எல்லாமே ரொம்ப பாப்புலரானவை. சூப்பர் ஸ்டார் நடிகர்கள் நடித்த படங்கள் என்பதுதான்.

தளபதியின் பிகில்
ஜனவரி 15ம் தேதி பிகில் படத்தைப் போடவுள்ளது சன் டிவி. அன்று மாலை 6. 30 மணிக்கு இப்படம் போடப்படுகிறது. பிகில் படம் கடந்த தீபாவளிக்குத்தான் வந்தது. மிகப் பெரிய வெற்றியை பெற்ற பிளாக்பஸ்டர் படம் இது. அதற்குள் சன் டிவி இதை திரையிடுகிறது.

அன் கண்டிஷனல் லவ்வு
ஜனவரி 16ம் தேதி மாலை 6.30 மணிக்கு நம்ம வீட்டுப் பிள்ளை படம் போடப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடித்த பிளாக்பஸ்டர் படம் இது. மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த ஹிட் படம் இப்படம்.லவ்வு லவ்வு அன்கண்டிஷனல் லவ்வு என்று குழந்தைகளையும் பேச வைத்த படம் இது.

சங்கத் தமிழன்
17ம் தேதி விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன். இந்தப் படம் பெரிய அளவில் ஓடவில்லை இருப்பினும் பாடல்கள் ஹிட் ஆகின. இப்படத்தையும் சன் டிவி ரசிகர்களுக்கு விருந்தாகுகிறது.

தல விஸ்வாசம்
18ம் தேதி அஜீத் நயன்தாரா நடித்த மெகா ஹிட் படமான விஸ்வாசம் போடப்படுகிறது. இதுவும் அதே மாலை 6. 30 மணிக்குத்தான். அதேபோல 19ம் தேதி ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் திரையிடப்படுகிறது. இந்த இரு படங்களும் கடந்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வந்த படங்கள் என்பது நினைவிருக்கலாம்.
பொங்கலுக்கு வரிசையாக 4 புதிய திரைப்படங்கள் என்று இப்போதே ப்ரோமோ போட்டு தாக்கி வருகிறது சன் டிவி. அது மட்டுமல்ல மக்களே.. பொங்கல் பண்டிகை நாட்களில் தினசரி 3 படங்கள் போடப் போகிறார்களாம்.. சன்னுக்கு எப்பவுமே தில்லு ஜாஸ்திதான்!
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications