பாலிவுட் நடிகைகளின் விளம்பர மோகம்.. கவர்ச்சி பொங்குதே.. கலகலக்குதே!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை என்றாலே இந்தியாவின் முதல் நாகரீக நகரம் என்று, சொல்லலாம். ஹாலிவுட்டின் முதல் ஃபேஷன்..அது உடையாகட்டும், தலை முடி ஸ்டைலாகட்டும் இப்படி எதுவும் முதலில் தொற்றுவது பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை சினிமா உலகில்தான்.

மும்பையில் பெரும் பணக்காரர்களும் நாகரீகமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால், அவர்களுக்கு நிகராக இல்லை என்றாலும், ஏழைகளுக்கு ஏற்ற எள்ளுருண்டை மாதியாக நாகரீகமாக வாழவும் மும்பையில் இடமுண்டு.

மும்பை ஒரு பாதுகாப்பான நகரம் என்று கூட அங்கு வசிக்கும் மக்கள் சொல்வதுண்டு. நம்ம தமிழ் நடிகர் நடிகைகளுக்கு கூட பாலிவுட்டில் நடிப்பதை தங்களது கனவாகவே நினைத்து காத்திருக்கிறார்கள்.

இந்தி தெலுங்கு

இந்தி தெலுங்கு

பெரும்பாலும் இந்தி மொழி மற்றும் தெலுங்கு மொழி நடிகர் நடிகைகளுக்கு விளம்பர படத்தில் நடிக்க பெரும் வாய்ப்புக்கள் குவிந்து வருகின்றன. அவர்களும் தாங்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கு நிகராக விளம்பர படங்களில் ஓய்வின்றி நடித்து வருகின்றனர்.நடிகை ஹேமமாலினியில் ஆரம்பித்து இன்றைய கிரிட்டி சனான் வரை பலர் விளம்பரப் படங்களில் நடித்து வருகின்றனர்.

ஐஸ்வர்யா பச்சன்

ஐஸ்வர்யா பச்சன்

ஐஸ்வர்யா ராயாக இருந்த காலத்திலிருந்து, இப்போது ஐஸ்வர்யா பச்சனாக மாறிய இக்காலம் வரை ஐஸ்வர்யா ராய் விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு உலக அழகி பட்டம் கிடைத்த நாளில் இருந்தே அவருக்கு விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்பு வந்துகொண்டே இருக்கிறது.

இந்தி நடிகைகள்

இந்தி நடிகைகள்

இப்படி இருக்கையில் விளம்பர படங்களில் நடிக்க தெலுங்கு, இந்தி நடிகைகள் முதல் வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்.அதே சமயம் சினிமாவில் நடிக்க வரும் வாய்ப்பையும் அவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அங்கு விளம்பர படங்களில் நடித்தால் போதும், திரைப்பட வாய்ப்புக்கள் நிறைய வருமென்பது அவர்கள் கணிப்பு. அது தப்பாகாமல் விளம்பர படங்களில் நடிக்கும் நடிகைகள் முன்னணியில் இருக்கின்றனர்.

அனுஷ்கா ஷர்மா ஆல்யா பட்

அனுஷ்கா ஷர்மா ஆல்யா பட்

நடிகை ஆல்யா பட், அனுஷ்கா ஷர்மாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே விளம்பரங்கள் குவிந்து கொண்டு இருந்தன. அடுத்து இதில் இணைந்தவர் தீபிகா படுகோனே. வித்யா பாலன் ஆரம்ப காலத்தில் இருந்தே மாடல்தான். இப்போது மாடலின் அதாவது விளம்பர பட உலகில் மாடலிங்கில் கலக்கி வருபவர்கள் நடிகைகள் கிரிட்டி சனான், ஷ்ரத்தா கபூர், யாமி கவுதம் ஆகியோர் என்று சொல்கிறார்கள்.

தமிழ்த் திரை உலக நடிகைகளில் இளம் வயது நடிகைகளில் திரிஷா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற ஒரு சிலர் தவிர விளம்பர படங்களில் நடிக்க ஆர்வம் இல்லையா.. இல்லை வாய்ப்புக்கள் வருவதில்லையா என்பதை இனி ஆராய்ந்த பின்னர்தான் சொல்ல வேண்டும். .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+