"அந்த’’ காரணத்தால் ரஜினியோடு நடிக்கவில்லை..கமலோடு சூட்டிங் அனுபவம் பகிர்ந்த எதிர்நீச்சல் பட்டம்மாள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பட்டம்மாள் பாட்டியாக நடிக்கும் பாம்பே ஞானம் கமல்ஹாசனோடு நடித்த அனுபவங்களை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அவ்வை சண்முகி திரைப்படத்தில் கமல்ஹாசன் உடன் நடிக்கும்போது கமல் என்று அவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறி இருக்கிறாராம். அதுபோல இயந்திரன் படத்தில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும் அதை மறுத்து விட்டாராம் அதற்கான காரணங்களை கூறியிருக்கிறார்.

எதிர்நீச்சல் பட்டம்மாள்
சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்கள் ஒரு சில ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து நெடுந்தொடர்களாக ஒளிபரப்பாகி வரும், அந்த மாதிரி ஒளிபரப்பாக தொடங்கிய ஒரு சில மாதங்களில் ரசிகர்களை கவர்ந்த சீரியலில் ஒன்றாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. அதுவும் சீரியல் தொடங்கி பல மாதங்களாகவே பேசாமல் இருந்த அப்பத்தா முதல் முறையாக இப்போது தான் பேசிக் கொண்டிருக்கிறார். இவருடைய மாஸான வசனங்களை பார்த்து ரசிகர்கள் கைதட்டி ஆர்ப்பரித்து வருகின்றனர். இதை தான் எதிர்பார்த்தோம் என்று பலரும் கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த சீரியலில் பட்டம்மாளாக நடிக்கும் நடிகையின் பெயர் பாம்பே ஞானம் அவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். .ஒரு நாடக நடிகையாகவும், நாடகக் கம்பெனியை நடத்தி வந்தவருமாக இருந்த பாம்பே ஞானம் தன்னுடைய சினிமா அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

அவ்வை சண்முகி அனுபவம்
பாம்பே ஞானம் கமல்ஹாசன் பெண் வேடமிட்டு நடித்த அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடித்தாராம். ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் இருக்கும் போது ஒரு கட்டு மஸ்தான பெண் ஒருவர் வந்ததும் யார் இந்த பெண் வேறு நாட்டில் இருந்து வந்திருப்பாரோ என்று ஆச்சரியமாக அந்த பெண்ணை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாராம். ஆனால் அங்கே இருந்தவர்கள் பலரும் அவரிடம் எழுந்து வணக்கம் சொல்லி சகஜமாக பேசிக் கொண்டிருந்தார்களாம். ஆனால் இவருக்கு மட்டும் அது யார் என்றே தெரியவில்லையாம் ஆனால் அழகாக இருக்கிறாரே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போது தான் தெரிந்ததாம் அது கமல்ஹாசன் என்று, சூட்டிங் ஸ்பாட்டில் இவரால் கண்டுகொள்ள முடியாத வகையில் தான் கமல் அன்று இருந்தாராம். அவரோடு நடித்த அனுபவங்களை மகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார்.

எந்திரனை தவிர்க்க காரணம்
கமலுடன் மட்டுமல்லாமல் ரஜினி நடித்த எந்திரன் திரைப்படத்தில் ரஜினியின் அம்மாவாக இவர்தான் ஆரம்பத்தில் நடிப்பதற்காக இருந்ததாம். இவருடைய வீட்டிலே இந்த திரைப்படத்துக்கான போட்டோ சூட் நடத்தி இருக்கிறார்கள். நூறு விதமான கெட்டப் போட்டு முதலில் போட்டோ சூட் நடத்திவிட்டார்களாம். அனைத்தையும் பார்த்து ஓகே நீங்களே நடித்து விடலாம் என்று சொன்ன பிறகு இவர்கள் ஒரு மாதம் முழுக்க கால்ஷீட் கேட்டார்களாம். ஆனால் அப்போது பாம்பே ஞானத்தால் அவ்வளவு நாட்கள் பொறுமையாக கால் சீட்டு கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம். ஒரு வாரம் என்றால் என்னால் முடியும் ஆனால் ஒரு மாதம் முழுக்க என்னால் ஒரே திரைப்படத்திற்கு கால் சீட்டு கொடுக்க முடியாது என்று இவர் மறுத்து விட்டாராம். அதற்கு பிறகு தான் அவருடைய இடத்தில் வேற ஒரு நடிகை நடித்து வந்தாராம். அதனால் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என்று கூறியிருக்கிறார்.

சீரியலுக்கு வருவதற்கு காரணம்
தான் பணத்திற்காக நடிப்பதற்கு ஆசைப்பட்டது கிடையாது. ஆனால் நடிப்பு என்று வந்துவிட்டால் அதற்கு பணம் வாங்குகிறோம். ஆனால் கண்டிப்பாக நடித்து பணம் பெற்று வாங்கி விட வேண்டும் என்பது இல்லை .கதை பிடித்திருக்க வேண்டும் அதே நேரத்தில் தன்னுடைய திறமையை காட்டுவதாக இருக்க வேண்டும். அந்த மாதிரி இடத்தில் தான் நான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய கதையை ஆரம்பத்தில் கேட்டதுமே இவருக்கு அதிகமாக பிடித்து விட்டதாம். தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கதை போலவே இந்த சீரியலிலும் இருந்து வருவதாக பட்டம்மாள் கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் இவர் இந்த சீரியலில் நடிக்கும் போது வெளியே சென்றால் நீங்கள் எப்போது தான் பேசுவீர்கள் என்று பலரும் கேள்வி கேட்பார்கள். இப்போது இவர் பேசி ரசிகர்களை அதிகமாக கவர்ந்த பிறகு இவர் வெளியவே செல்லவே இல்லையாம்.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications