ஆனந்தி கண்மணி ரெண்டு பேர் கதையும் ஒரே டிராக்கில் போகுதே..!
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் ஆனந்தியும், கண்மணியும் உயிர் தோழிகள். ரெண்டு பேர் புருஷன் மேலேயும் வேற ரெண்டு பொண்ணுங்க ஆசைப்படறாங்க.
இவங்களை அடைய இந்த இரண்டு பொண்ணுங்களும் எஸ்டீம் லெவலுக்கு போறாங்க. ஆனந்திக்கு போட்டியா திருவை அடைய நினைக்கும் அனன்யா ரொம்ப மோசம்.
திருவுக்கு ஆனந்தியோட கல்யாணம் நடந்தது ஒரு ஆக்சிடென்ட்ல மறந்துடுது. இதை பயன்படுத்தி, அனன்யா வீட்டுலயும், திருவோட அப்பாவும் திருவுக்கும், அனன்யாவுக்கும் கல்யாணம் செய்துவைக்க ஏற்பாடு செய்யறாங்க.

மாத்திரைகளை மாத்தி
திருவுக்கு பழைய ஞாபகங்கள் திரும்ப வர்ற மாதிரியான மாத்திரைகள் எல்லாத்தையும் மாத்தி வச்சுடறா அனன்யா. அதனாலேயே திருவுக்கு நினைவுகள் திரும்புவதில் தாமதம் ஆகுது.

நினைவு திரும்புவதற்குள்
அந்த மாத்திரை திடீரென கீழே சாக்கடையில் விழுந்துட, ஒரிஜினல் மாத்திரைகளை வரவழைச்சுடறாங்க. இதை கேட்ட அனன்யா துடிச்சு போறா. எதுக்கு இப்படி ஷாக் ஆகறே அதான் மாத்திரை வரவழைச்சாச்சேன்னு திரு சொல்றான்.

மறுபடியும் மாத்திரைகளை
உடனடியா மறுபடியும் மாத்திரைகளை மாத்தி வைக்க ஏற்பாடு செய்து, மாத்தியும் வச்சுடறா அனன்யா. இப்போ இவ மாத்திரை மாத்தி வச்சுட்டு, ஒரிஜினல் மாத்திரையை எடுத்துட்டு போனதை ஆனந்தி கண்டு பிடிச்சு, ஆன் லைன்ல ஒரிஜினல் மாத்திரை ஆர்டர் பண்ணி வச்சுடறாங்க.

கண்மணி வாழ்க்கை
ஆனந்தி தோழி கண்மணி வாழ்க்கை சுகாசினின்னு ஒரு பொண்ணால கெட்டுபோயிகிட்டு இருக்கு. கண்மணி புருஷன் செழியனும், சுகாசினி பேச்சை கேட்டுகிட்டு, கண்மணியை வார்த்தையாலயும், செயல்களாலேயும் நோகடிக்கறான்.

வெளியே வந்தும்
கண்மணி போதுண்டா சாமின்னு வீட்டை விட்டு பிறந்த வீட்டுக்கு வந்துடறா. இப்போதுதான் செழியனுக்கு கண்மணியின் பிரிவு வேதனை தருது. அவளை அழைச்சுக்கிட்டு வந்துட போறேன்னு சுகாசினிகிட்ட செழியன் சொல்ல.. இவள் கண்மணியை கடத்த ஆட்களை அனுப்பி வைக்கறா.

புரியலையே ஏன்?
ஒரு ஆண்..அதுவும் கல்யாணம் ஆனவன்...அவன் மேல் இந்த பொண்ணுங்களுக்கு ஏன் ஆசை வருது...? இதெல்லாம் தப்புன்னு சொல்றதை விட, இதனால கஷ்டமும்தான்னு இவங்களுக்கு புரிய மாட்டேங்குதே...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications