ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி? பிக்பாஸ் தமிழ் சீசன் 6 தொகுப்பாளர் அதிரடி மாற்றம்? புது ஹோஸ்ட் இவரா?
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 6 இல் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறதாமே. அது தொடக்க நாளில்தான் உறுதியாக தெரியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட நபர்களை ஒரே வீட்டில் தங்க வைத்து அவர்களில் யார் மக்களின் மனதை கவருகிறார்களோ அவரே அந்த சீசனின் வின்னராக அறிவிக்கப்படுவார்.
இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளன. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய 5ஆவது சீசனில் இறுதி கட்டத்தில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று பாதித்தது. இதையடுத்து ஒரு வாரம் மட்டும் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அல்டிமேட்
கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்ததும் மீதமிருந்த நிகழ்ச்சி முதல் ஃபைனலிஸ்ட் தேர்வு வரை தொகுத்து வழங்கினார். இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இது ஹாடஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டது. விக்ரம் படத்தின் படப்பிடிப்பு இருந்ததால் இந்த நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் வெளியேறினார்.

ரம்யா கிருஷ்ணன் இல்லை
இதையடுத்து அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சின்னத்திரையிலும் வாரந்தோறும் சிம்புவை பார்த்ததால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சீசன் 6 நிகழ்ச்சி
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் சீசன் 6 வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இது நவம்பர் மாதம் தொடங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கினாலும் அவரை காட்டிலும் சிம்பு தொகுத்து வழங்கினால் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் விரும்புவதாக தெரிகிறது.

கமலும் சிம்பும்
இந்த நிலையில் கமலும் சிம்பும் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளனர். இதனால் இருவரிடமும் நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம் பேசிய நிலையில் அக்டோபரில் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு நவம்பரில் நிகழ்ச்சியை தொடங்க சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. எனவே ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமலும் சிம்பும் தொகுத்து வழங்கவுள்ளதாக தெரிகிறது. இது அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாளின் போது தெரியவரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications