அக்காவும் தங்கச்சியும் ஒரே வீட்டுக்கு மருமகளா... ஐயோ பாவம்!
சென்னை: விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியல் ஒரு விஷயத்தில் விழிப்புணர்வு தருது. அக்கா மலர் வெற்றியை கல்யாணம் செய்துக்கறா. இதுவும் திட்டமிட்டு நடந்த கல்யாணம் இல்லை.
மலரின் தங்கை அகிலா வெற்றியின் தம்பி புகழை கல்யாணம் செய்துக்கறா. இதுவும் திட்டமிட்டு நடந்த கல்யாணம் இல்லை. இரு ஜோடிகளும் இன்னும் தம்பதியாக வாழ ஆரம்பிக்கலை.
வெற்றி மலரை இப்போதுதான் காதலிக்க ஆரம்பிச்சு இருக்கான்.கோப தாபங்களை மறந்து இருவருமே ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு இருக்கும் காதலை எப்படி சொல்லலாம்னு காத்து இருக்காங்க.

புகழ் அகிலா
மலரின் தங்கச்சி அகிலா கல்யாணத்துக்கு போயி இருக்கும்போது அவள் குளிப்பதை எவனோ வீடியோ எடுத்து மாப்பிள்ளைக்கு அனுப்ப, அகிலாவின் கல்யாணம் நின்னு போயிருது. உடனே வெற்றி தனது தம்பி புகழுக்கு அகிலாவை கல்யாணம் செய்து வச்சுடறான். இப்படித்தான் அகிலா, புகழ் சேர்ந்தது.

வீடியோ எடுத்தவன்
அகிலாவை வீடியோ எடுத்தவன் பாரில் வந்து புகழிடம் அவ்வப்போது வெறுப்பேத்த அவன் வீட்டுக்கு வந்து தூங்கும் அகிலாவை அடிப்பது ,திட்டுவது என்று அகிலா நரகத்தை அனுபவிக்கிறாள். போதாக் குறைக்கு மாமியார், நாத்தனார் என்று குத்தல் பேச்சு, ஏச்சுக்கள் என்று அகிலா ரொம்ப கஷ்டம் அனுபவிக்கிறாள்.

பாரில் ஒரு நாள்
பாரில் ஒரு நாள் அகிலாவை வீடியோ எடுத்தவன், உன் பொண்டாட்டி முதுகில் ஒரு ரூபாய் அளவு மச்சம் இருக்குடா..அதை நீ பார்த்திருக்கிறயா... நான் பார்த்து இருக்கேன்னு சொல்றான். புகழுக்கு கோவம் தலைக்கு ஏற அதையும் தூங்கிக் கொண்டு இருந்த பொண்டாட்டி அகிலாவின் முகத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்பி திட்டறான்.

மச்சம் அக்காக்களிடம்
புகழின் அக்காக்கள் ரெண்டு பேரும், என்னடா புகழ் வருத்தமா உட்கார்ந்து இருக்கேன்னு கேட்க...இவன் மச்சம் பத்தி சொல்றான்.விடு, இருக்கா இல்லையான்னு நாங்க பார்த்து உனக்கு சொல்றோம்னு சொல்லி... அகிலாவை புடவை கட்ட சொல்லி பார்க்க அகிலா முதுகில் எந்த மச்சமும் இல்லை.

பொய் சொல்றாங்க
ஆனால்,அக்காக்கள் ரெண்டு பேரும் அகிலாவின் முதுகில் மச்சம் இருக்குடா தம்பின்னு பொய் சொல்லிடறாங்க. பாவம் இன்னும் அதிகமாக புகழ் அகிலாவை வெறுக்கறான். வாழ்க்கை யார் யாருக்கெல்லாம் எப்படி எப்படி எல்லாம் மாறுது பாருங்க....
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications