கடைசியில் இப்படி பண்ணிட்டாரே சித்ரா.. கலங்கும் "கால்ஸ்" டீம்!
சென்னை: சிலர் நம் கூட இல்லாவிட்டாலும் அவர்கள் பேசிய பேச்சுக்களும் அவர்கள் நினைவுகள் மட்டும்தான் நம் கூடவே இருந்து கொண்டிருக்கும்.
அந்த மாதிரி தான் தற்போது மறைந்த சின்னத்திரை நடிகர் சித்ராவின் நினைவுகளும் ரசிகர்கள் மனதிலும் அவர் கூட நடித்த நடிகர்களின் மனதிலும் இருந்து வருகிறது.
அவர் முதன் முதலாக நடித்து வெளியான கால்ஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை பார்த்து அவரது ரசிகர்கள் கண் கலங்கி கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தின் இயக்குனர் சித்ராவை பற்றி பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இல்லாமல் வருந்துகிறோம்
அதில் அவர் சித்ரா முதல் முதலில் நடித்த திரைப்படத்தை அவர் இல்லாத இந்த நேரத்தில் வெளியிடுவது மிகவும் வருத்தமாக தான் இருக்கிறது .இருந்தாலும் அவரது ஆசை அவர் பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் தான். நடித்த முதல் படத்தை பார்ப்பதற்கு கூட பொறுமை இல்லாமல் தற்போது நம்மளை எல்லாம் விட்டு சென்றுவிட்டார்.

மனதைத் தைக்கும் நைட்டி
வருத்தத்தை விடவும் இறக்கும்போது அணிந்திருந்த நைட்டியை பார்க்கும்போது மனது ரொம்ப வலிக்கிறது. இந்த திரைப்படத்தில் இவர் கால்செண்டரில் வேலை பார்க்கும் பெண்ணாக நடித்திருக்கிறார் .அதில் ஒரு சீனில் சித்ரா கடைசியாக இறக்கும் போது அணிந்திருந்த அதே நைட்டியை போட்டிருப்பார். அந்த நேரத்தில் போட்டு நடித்து முடித்த பிறகு இந்த நைட்டி எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. அதனால் நானே வைத்துக் கொள்கிறேன் என்று கேட்டு வாங்கி வைத்துக் கொண்டாராம்.

ஆசை ஆசையாக கேட்டு வாங்கினார்
அவர் ஆசையாக வாங்கிய நைட்டியை போட்டுக்கொண்டு கடைசியாக உயிரை விட்டிருக்கிறார் என்று நினைக்கும்போது மனசு ரொம்பவே வலிக்கிறது என்று கஷ்டத்தோடு கூறியிருக்கிறார் இயக்குநர். சிலர் நாம் கூட இல்லாத பொழுது இருந்த வரைக்கும் நம் கூட இருந்த இனிமையான நினைவுகளும். அவர்கள் பேசிய பேச்சும் நம் மனதிற்குள் தான் இருந்து கொண்டு இருக்கும்.

படபட பேச்சு
அந்த மாதிரி தான் தற்போது வரைக்கும் சித்ரா கூட இல்லாவிட்டாலும் அவருடைய எளிமையான குணமும் எப்போதுமே படபடவென பேசிக்கொண்டிருக்கும் அவருடைய பேச்சுக்களும் அனைவரின் காதுகளிலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது .அதற்கு மேல் அவர் விதவிதமாக எடுக்கும் வீடியோக்களை பார்த்து பல ரசிகர்கள் ஆறுதல் அடைந்தாலும் சிலர் அந்த வீடியோக்களை பார்த்து கவலைப்பட்டு வருகிறார்கள்.

மர்ம முடிச்சுகள்
சித்ராவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களும் முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன .இந்த நிலையில் இவரது கணவரை காவல்துறையினர் கைது செய்து இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் இதுதான் அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை கிடையாது.

மனதில் உயிர் வாழ்கிறார்
இதைத்தான் அனைத்து ரசிகர்களும் நடிகர்களும் தொடர்ந்து கூறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சித்ரா இறந்து ஒரு வாரம் ஆனாலும் இன்னுமும் சமூகவலைத்தளங்களில் அவரது செய்திகள்தான் வைரலாக பரவி வந்து கொண்டிருக்கிறது .நடிகர்கள் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவரைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications