ஏங்க.. .விஸ்வாசம் படத்துல கட்டிப் பிடிக்க கோட் வோர்ட் மாதிரி நாமளும்... வேற பேசிக்கலாமா!
சென்னை: விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயன், அரவிந்த் என்று டபுள் ரோலில் ஆர்.ஜெ செந்தில் நடிச்சிருக்கார்.
இதில் வளர்ப்பு அம்மா வளர்க்கற ஒருத்தர் பேரு அரவிந்த் டாக்டரா இருக்கான்.இன்னொருத்தன் மாயன் படிக்காதவன். அவன் வீட்டோட மருமகனா போயிட்டதில், இப்போ பெத்த அப்பா அம்மாவோட ஒரு புள்ளையும் இல்லை.
இந்த சமயத்துலதான் பெத்த அப்பாவுக்கு கடைசி காலக்கட்டம்.. உடம்பு சரியில்லை.. பிழைக்க மாட்டார்னு டாக்டர் பிள்ளை கூடவே இருக்கணும்னு அப்பா ஆசைப்படறார்.

தாமரை
அரவிந்த் குடும்பமா வந்து பெத்த அப்பா வீட்டுல தங்கி இருக்கறதுல ரெண்டு மாமியார்கிட்ட மாட்டிகிட்டு முழிக்கறது அரவிந்த் பொண்டாட்டி தாமரைதான்.

மாத்திரை
தாமரை நடு ஹாலில் நிற்க, தாமரை மாத்திரை வேணும்னு கேட்டீயே..இந்தா இதை ரூம்ல வைன்னு சொல்றான். நான் மாத்திரை கேட்டேனா.. இல்லையேன்னு தாமரை சொல்ல.. நீ கேட்ட தாமரை.. மறந்துருப்பேன்னு சொல்றான் அரவிந்த்.

சர்ப்ரைஸ்
அதுதான் மாத்திரை கேட்கலேன்னு சொல்லுது.. நீ எதையாவது மாத்திரைன்னு குடுத்துடாத தம்பின்னு சொல்லிட்டு அப்பா போயிடறார். இப்போ ஹாலில் யாரும் இல்லை. தாமரை இப்போ பார்சலை பிரிச்சு பாருன்னு சொல்றான்.தாமரை பிரிக்க மாத்திரைதான் இருக்கு. அதுக்கு அடியில பாருன்னு சொல்ல, பார்த்தா மதுரை மல்லி பூ..திருநெல்வேலி அல்வா.

தாமரை
தாமரை பாவம் நீ.. ரெண்டு மாமியாரை வச்சு சமாளிக்கறது எவ்ளோ கஷ்டம்.. உனக்கு சர்பிரைஸ் கொடுக்கணும்னு தோணுச்சு.. நாம தனியா பேசி எவ்ளோ நாளாகுது இல்லைன்னு கேட்கறான் அரவிந்த்.

கோட் வேர்ட்
ஏங்க.. அஜீத் நடிச்ச விஸ்வாசம் படத்துல கட்டிப் பிடிக்கணும்னு தோணும் போதெல்லாம் கையை அழுத்தி புடிச்சுக்குவோம்னு கோட் வேர்ட் வகிச்சுக்குவாங்களே அதுமாதிரி நாமளும்னு.. தாமரை சொல்ல, அவன் கையை பிடிக்கறான். இல்லைங்க அதுவே வேணாம் நாம அதுமாதிரி வேற ஏதாவதுன்னு சொல்றா தாமரை.

நல்லாருக்கு
சரி தாமரை, காபி நல்லாருக்குன்னு நான் சொன்னா நீ அழகா இருக்கேன்னு அர்த்தம். ஷர்ட் அயர்ன் பண்ணனும்னு சொன்னா, உன் கூட தனியா பேசணும்னு அர்த்தம். கிளம்பட்டுமான்னு கேட்டா என் கூட நீயும் வரணும்னு அர்த்தம்.. சரியான்னு சிரிச்சுகிட்டே சொல்றான். அயர்ன் பண்ற வேலை இருக்கான்னு கேட்டுதாமரை வெட்கப்பட்டு சிரிக்கறா.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications