மாமாவை அண்ணான்னு கூப்பிட்டா நல்லாவா இருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீயா நானா ரியாலிட்டி ஷோவில், தான் மாமாவை அண்ணான்னு கூப்பிடுவேன்னு ஒருத்தர் சொல்ல, அப்படி கூப்பிட வைத்தது நல்லாவா இருக்குதுன்னு கேட்கிறார் கோபிநாத்.

விஜய் டிவியின் புகழ்பெற்ற ஒரு ரியாலிட்டி ஷோன்னா அது கோபிநாத் நடத்தும் நீயா நானா நிகழ்ச்சியும் ஒன்று என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது.

நீயா நானாவுக்கு என்று ஒரு தனிப் புகழ் உண்டு. அது இன்னமும் இருக்கு என்றாலும்,நேரம் மாற்றம் அதன் சரிவுக்கு ஒரு பெரிய காரணம் என்று சொல்லலாம்.

மாமன், மச்சான் VS அக்கா!

மாமன், மச்சான் VS அக்கா!

வரும் ஞாயிறு மதியம் 12 மணிக்கு மாமன், மச்சான் VS அக்கா என்கிற தலைப்பில் இந்த ஷோ ஒளிபரப்பாக உள்ளது. .இதன் ப்ரோமோ பார்க்க இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. அக்காக்களும், தம்பிகளும், கலந்துகொண்டு இருக்கின்றனர்.

அக்கா புருஷனை

அக்கா புருஷனை

அக்காவை கல்யாணம் செய்து கொண்டவரை எப்படி அழைப்பீர்கள், அவர்களிடம் உறவு முறை எப்படி என்பது பற்றிய நிகழ்ச்சியாக இது இருப்பது போல் தெரிகிறது. மாமன் மச்சான் உறவு என்பது எத்தனை அற்புதமானது என்று கூட இதை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.

ரன் படம்

ரன் படம்

மாதவன், ரகுவரன் நடிச்சு இருக்கும் ரன் படத்தில் இப்படித்தான் அனு ஹாசனின் கணவராக ரகுவரனும், தம்பியாக மாதவனும் நடித்து இருப்பார்கள்.அதில் மாமனும் மச்சானும் பேசிக்கொள்ள மாட்டார்களா என்று தவம் கிடப்பார் அனு ஹாசன்.

இங்கும் ஒரு பெண்

இங்கும் ஒரு பெண்

அது போலவே இங்கும் ஒரு பெண் சொல்கிறார்..ரெண்டு பேரும் பேசிக்கறதே அரிதா இருக்கும் சார் என்று. இன்னொரு பெண் சொல்கிறார் எந்த வேலையா இருந்தாலும் அவனுக்குத்தான் சார் குடுப்பாங்க என்று. இதற்கு ஒருவர் சொல்றார் என்ன பண்றது அக்கா முகம் மாற கூடாதேன்னு செய்ய வேண்டியதா இருக்குன்னு.

மாமாவா மச்சானா?

மாமாவா மச்சானா?

மாமாவா மச்சானா எப்படி கூப்பிடுவீர்களென்று கேட்டபோது ஒருத்தர் சொன்னார் ஒண்ணுமே சொல்லி கூப்பிட மாட்டேன்.சில சமயம் அண்ணன்னு கூப்பிட்டுடுவேன் என்று. அதற்கு இந்த குழந்தை உங்களை எப்படி கூப்பிடும்னு கோபிநாத் கேட்க, அவன் ஸ்ட்ரெயிட்டா மாமான்னு கூப்பிடுவான்னு அவர் சொல்றார்..

அண்ணா மாமா

அண்ணா மாமா

அந்த குழந்தையிடம் அண்ணான்னு கூப்பிடு என்க, அது மாமாவைப் பார்த்து அண்ணா என்று கூப்பிடுகிறது. ம்ம்..பாருங்க நல்லாவா இருக்குன்னு கேட்கிறார் கோபிநாத். நிகழ்ச்சி நன்றாக இருக்கும் போல இருக்கிறது உறவுகளின் அர்த்தத்தை உணர்த்தும் இந்த நிகழ்ச்சியை ஞாயிறு மதியம் பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+