Captain Prabhakaran: கேப்டன் பிரபாகரனில் விஜயகாந்த் வந்ததும்! கதறி அழுத பிரேமலதா, விஜய பிரபாகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேப்டன் பிரபாகரன் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் திரையில் விஜயகாந்த் வந்தவுடன் மனைவி பிரேமலதாவும் மகன் விஜய பிரபாகரனும் தேம்பி அழுத காட்சி காண்போரை கலங்க வைக்கிறது. அழுது கொண்டே விஜய பிரபாகரன் கை தட்டி, விசில் அடித்து ஆரவாரமும் செய்தார்.

விஜயகாந்தின் 100 ஆவது படத்தை திரைப்படக் கல்லூரி மாணவரான ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். இந்த படத்தை இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்திருந்தார்.

television captain prabhakaran

இந்த படத்தில் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், ரூபிணி, லிவிங்ஸ்டன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் முதல் முறையாக மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தார். படத்திற்கு இசை இளையராஜா.

வசனங்கள்

படத்தின் வசனங்கள் லியாகத் அலிகான் எழுதியிருந்தார். விஜயகாந்த் பேசும் வசனங்கள் அனைத்தும் தெறிக்கவிட்டன. தற்போது கூலி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் கேப்டன் பிரபாகரன் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 4கே டிஜிட்டல் தரத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது.

400 தியேட்டர்களில் ரிலீஸ்

400 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தில் சில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது விஜயகாந்த் தற்போது இல்லாத நிலையில், திரையில் அவர் தோன்றி, "நான் மறைந்தாலும் உங்கள் நினைவுகளில் எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்.

விஜயகாந்த் பஞ்ச்

தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா. இது எனது 100-ஆவது படம். இந்த பெருமை எனக்கு கிடைக்க காரணமாக இருந்த தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி" என தெரிவித்திருந்தார்.

தாயில்லாத எனக்கு தாய்

"தாயில்லாத எனக்கு தாயாக இருந்து திரையுலகில் நிலைக்க வைத்த தமிழகத்து தாய்மார்களுக்கும், அண்ணனாக ஏற்றுக்கொண்டு ஆதரித்த அன்பு சகோதரிகளுக்கும், என்னை உயிராக நினைக்கும் எனது உயிரான மன்றத்து சகோதரர்களுக்கும் அன்பு ரசிகர்களுக்கும், என்னை இயக்கிய இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், என்னைத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி நன்றி! அன்புடன் விஜயகாந்த்" என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கேப்டன் பிரபாகரன்

கேப்டன் பிரபாகரன் வெளியான அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்புல்லாகியுள்ளது. இந்த படத்தை பார்க்க நிறைய இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் இந்த படத்தை விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன் விஜயபிரபாகரன், மைத்துனர் சுதீஷ் உள்ளிட்டோர் பார்த்தனர்.

பிரேமலதா கண்ணீர்

அப்போது விஜயகாந்த் வந்த சீனுக்கு பிரேமலதாவும் விஜய பிரபாகரனும் தேம்பி தேம்பி அழுதனர். தன் மகனை அழுவதை பார்த்து அவரை சமாதானம் செய்ய அவருக்கு பிரேமலதா முத்தமிட்டார். எனினும் பிரேமலதாவும் அழுதார்.

கதறிய விஜய பிரபாகரன்

பிரேமலதா இரு கைகளையும் நீட்டி அழுதது, "இப்படி எங்களை தவிக்க விட்டு போய்ட்டீங்களே, உங்களை நான், பசங்க, தொண்டர்கள், உறவினர்கள் எல்லாம் மிஸ் செய்கிறார்கள்" என்பதை போலும் "இப்படி அநியாயமாக போய்ட்டீங்களே " என்ற கதறலும் அந்த ஆக்ஷனில் இருந்தது.

உயிருடன் தோன்றியது போல்

விஜய பிரபாகரன் அழுதபடியே தந்தையின் சீனுக்கு கை தட்டியும் விசில் அடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனது தந்தையே திடீரென உயிருடன் கண் முன் தோன்றியது போல் அவர் திரையை பார்த்து உணர்ந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+