Chadralekha Serial: சந்திரலேகாவில் வனிதா நடிகையாவே வர்றாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமாகி தனது உண்மைத் தன்மையை மிக வெளிப்படையாகவே காண்பித்து ரசிகர்களின் மனத்தைக் கொள்ளைக் கொண்டவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது குடும்பத்தார் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கலந்துகொண்டு, தனது ஆசையை அவ்வப்போது கூறி வந்தார்.ஆனால், அது மட்டும் நடக்கவில்லை.

இவரது பெண் பெரியவளான போது கூட குடும்பத்தார் யாரும் வராமல் தாய் மாமன் ஸ்தானத்தில் இருந்து இயக்குநர் சேரன்தான் குடும்பத்துடன் வந்து சிறப்பித்தார்.

பிக்பாஸ் பரிசு

பிக்பாஸ் பரிசு

பிக்பாஸில் இவர் கட்ஸ் லேடி என்று விருதை வாங்கி இருந்தாலும் ,குடும்பத்தினர் என்னவோ இவரை கண்டுகொள்ளவே இல்லை. ஆனால், முதன் முதலாக இரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு அளித்திருக்கிறது சன் டிவி.சன் டிவியின் சந்திரலேகா சீரியலில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்து இன்று அதன் முதல் எபிஸோட் ஒளிபரப்பாகி உள்ளது.

சந்திரலேகா படம்

சந்திரலேகா படம்

வனிதா விஜயகுமார் 8 ம் வகுப்பு படிக்கும்போதே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்த படத்தின் பெயரும் சந்திரலேகாதான். இன்று இவர் நடிச்சு இருக்கும் சீரியலின் பெயரும் சந்திரலேகாதான். சந்திரலேகா படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

சீரியல் சந்திரலேகா

சீரியல் சந்திரலேகா

சந்திரலேகா சீரியல் சன் டிவியில் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இது கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக குடும்பத் தலைவிகளின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலில்தான் வனிதா விஜயகுமார் நடிகையாகவே வருகிறார். பெண்களுக்கு ஆதரவான நிறைய வசனங்கள் பேசுகிறாரா.

குறைத்து அழகாக

குறைத்து அழகாக

வனிதா விஜயகுமார் உடல் எடையைக் குறைத்து ரொம்ப அழகாக கரெக்ட்டான கச்சிதமான உடலுடன் காட்சி தருகிறார். இந்த சீரியலில் நடிகையாக நடிக்கும் இவர் ரோஜா சீரியலில் நடிகையாக வந்து போன நதியா மாதிரி கெஸ்ட் ரொலோடு நடித்து முடித்துக் கொள்வாரா இல்லை சீரியலில் தொடர்வாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+