சைக்கிள் கேப்ல சைடு பிசினஸை ஸ்டார்ட் செய்த கயல் நடிகை! டாப் ஹீரோயினாச்சே சைத்ரா.. ஏன் என்னாச்சு?
சென்னை: கயல் சீரியல் மூலம் இளைஞர்களின் மனதில் நிறைந்திருக்கும் சைத்ரா ரெட்டி தற்போது சைடு பிசினஸ்ஸை தொடங்கிவிட்டார் போல! அது குறித்து வீடியோவை போட்டுள்ளார்.
கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வந்தார். அவருக்கு சினிமா வாய்ப்பு வந்ததால் சீரியலில் இருந்து அவர் விலகியதும் அந்த சீரியலுக்கு வந்தவர்தான் சைத்ரா ரெட்டி!

கன்னடத்து பைங்கிளி! தமிழில் நடித்த முதல் சீரியல் இதுதான்! இதன் பிறகு ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாகவும் நடித்து மக்களை கவர்ந்தார். இதையடுத்து அவருக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே அஜித்துடன் இணைந்து வலிமை படத்தில் நடித்தார்.
இதன் பிறகுதான் அவருக்கு கயல் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது டிஆர்பி ரேட்டிங்கில் சக்கை போடு போடுகிறது. இந்த சீரியலுக்கு சைத்ரா ரெட்டிக்கு ஒரு நாளைக்கு ரூ 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் என சம்பளம் பேசப்பட்டதாக தெரிகிறது. அவர் இடம் பெறும் காட்சிகள் தினமும் இருக்கும்.

மாதத்தில் 20 நாட்கள் என வைத்துக் கொண்டாலே அவருக்கு 4 லட்சம் ரூபாய் கிடைக்கும். செவிலியர் பணி செய்யும் ஒரு சாதாரண குடும்பத்து பெண்- வீட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் உறவாடியே கெடுக்கும் பெரியப்பா குடும்பத்திற்கு மத்தியில் பிரச்சினைகளை உடைத்து எப்படி மேலே எழுகிறார் என்பதுதான் கதை.
அது என்னவோ கயலுக்கு எங்கிருந்துதான் டிசைன் டிசைனாக பிரச்சினை வருமோ தெரியல என சீரியல் பார்ப்போர் கேள்வி எழுப்பும் அளவுக்கு ஒன்று முடிந்தால் அடுத்தது, அது முடிந்தால் இன்னொன்று என ஆரம்பித்து வருகிறது. இப்படி சீரியல் கொடிக் கட்டி பறந்து கொண்டிருக்க, சைத்ராவோ சைடு பிசினஸை தொடங்கிவிட்டார்.

அதுகுறித்த வீடியோவையும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் மாட்டுக்கு பால் கறப்பது போன்ற ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். 50 மாடுகளை வைத்திருக்க வேண்டும் என ஆசைப்பட்ட நான் தற்போது மாட்டு பண்ணையே ஆரம்பித்துள்ளேன் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications