சைத்ராவுக்கு தேதி குறிச்சாச்சாம்.. மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிட்டாராம்!
சென்னை: யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கும் சைத்ரா ரெட்டியின் திருமண தேதியை குறிச்சாச்சு. இதை கேட்டு அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
யாரடி நீ மோகினி சீரியல் ஸ்வேதாவாக கலக்கிக் கொண்டிருக்கும் சைத்ராவுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் எங்கேஜ்மென்ட் முடிந்தது. இந்த எங்கேஜ்மெண்ட்டில் அவருடைய பிரண்ட்ஸ் போட்ட கொண்டாட்டம்தான் ஹைலைட்டாக இணையதளங்களில் பரவி வந்தது.
தற்போது இவரது திருமண தேதியும் சைத்ரா ரெட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார். நவம்பர் 11ஆம் தேதி இவரது திருமணம் நடைபெறுவதாக இன்விடேஷன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பண்ணி இருக்கிறார்.

ரசிகர்கள் ஆவல்
இதை பார்த்ததும் ரசிகர்கள் ஆவலாக அந்த நாளுக்காக காத்து இருக்கிறோம் என்று கூறி வருகிறார்கள். அதிலேயும் இவருக்கு வாழ்த்து மழைகளை இப்போதே போழிய இப்போதே ஆரம்பித்து விட்டார்கள். இவருடைய திருமணத்தில் ரசிகர்கள் இவருடைய பிரண்ட்ஸ்களின் ஆட்டம் பாட்டத்தை காண்பதற்காகவும் மேலும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

பாடாய்ப்படுத்தினாரே
இவர் யாரடி மோகினி சீரியல் வெண்ணிலாவாக நடிக்கும் நட்சத்திராவை அந்த சீரியலில் பாடாய் படுத்தி எடுத்து வருவார். ஆனால் அதற்கு எல்லாம் மொத்தமாக வைத்து இவரது எங்கேஜ்மெண்ட்டில் நட்சத்திராவும் அவருடைய பங்குக்கு இவரை வகைவகையாக வதைச்சு எடுத்து விட்டார். அதுமட்டுமல்லாமல் நிஜத்தில் இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள் என்பது பலருக்கு தெரிந்து இருந்தாலும் இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கும்.

இப்படியெல்லாம் பண்ணுவாங்களா
அதுவும் சிலர் இந்தத் எங்கேஜ்மெண்ட்டிலா இப்படி எல்லாம் பண்ணுவாங்க என்று கூறும் அளவிற்கு இவர்கள் சேட்டை கூடிப் போய் இருக்கிறது. சைத்ராவின் எங்கேஜ்மென்ட்டில் நட்சத்திரா, செம்பருத்தி ஷபானா, பூவே பூச்சூடவா ரேஷ்மா அனைவரும் சேர்ந்து சைத்ரா வையும் சைத்ரா வின் வருங்கால கணவரையும் பாடாய்படுத்தி இருந்தார்கள் .அதுவும் விதமாக போட்டோக்களும் வீடியோக்களும் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

செம்ம ஜாலி
இவரது எங்கேஜ்மெண்ட்டில் நடந்த ஜாலியான மொமன்ட்டுகள் இன்ஸ்டாகிராமில் ரொம்பவே பிரபலமாக பரவி வந்தது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ஜாலி பண்ணுவார்கள் .அது மட்டுமல்லாமல் சில வீடியோக்களும் எடுத்து ஒருவரை மாற்றி ஒருவர் கலாய்த்து வருவார்கள். சீரியல்தான் எல்லோரும் சீரியசாக கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜாலி கேர்ள்ஸ்
நிஜத்தில் இவர்கள் ஜாலியாக ஒருவரை ஒரு மாற்றி ஒருவர் கிண்டலடித்து என்ஜாய் பண்ணி கேர்ள்ஸ் பிலஸ்ட்டியாக தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் ஆட்டம் பாட்டத்தை பார்க்கும்போது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கிறது. அதனால் திருமண நாளை தெரிந்ததும் பல ரசிகர்களும் அந்த நாளுக்காக தான் நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூறி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications