வாயாடி ரேஷ்மா.. தீனி திண்ணி வெண்ணிலா.. ஃபுல் மேக்கப் ஷபானா.. க்யூட் அழகி சைத்ரா!
சென்னை: ஜீ தமிழ் மூலமாக க்யூட் வில்லியாக அறிமுகமாகி கலக்கி கொண்டிருக்கும் சைத்ரா ரெட்டி அவங்க பிரெண்ட்ஸ் கூட செமயா பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் யாரடி நீ மோகினி சீரியல் ஸ்வேதா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் சைத்ரா ரெட்டி தன்னுடைய பிறந்தநாளை தன்னுடைய பிரெண்ட்ஸ் கூட கொண்டாடி இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார். அது வைரலாக பரவி வருகிறது.
சைத்ரா ரெட்டி கன்னடத்தை சேர்ந்தவர். கன்னட மொழியில் தான் முதலில் அறிமுகமானார். கன்னட சீரியல்களிலும் ஒரு சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

சூப்பர் வில்லி
அதன்பிறகு தமிழில் முதல் முறையாக கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் பவானி சங்கர் நடித்துக்கொண்டிருந்த பிரியா கேரக்டரில் இவர் அறிமுகமானார் .இந்த சீரியலில் பவானி சங்கருக்கு கிடைத்துக் கொண்டிருந்த வரவேற்பு இவருக்கும் கிடைத்தது. இதனைத் தொடர்ந்துதான் யாரடி நீ மோகினி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ரொம்ப அழகான வில்லி
இந்த சீரியலில் டைரக்டர் இவரை நேரடியாக பார்த்து எனக்கு ஒரு அழகான வில்லி கேரக்டர் தேவைப்படுகிறது. படையப்பா படத்தில் நீலாம்பரி போல அழகா இருக்கணும். அதற்கு நீங்கள்தான் பொருத்தமாக இருப்பீர்கள் என்று சொன்னார்களாம். அப்போ சைத்ரா வுக்கும் தான் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க வேண்டுமென்று ரொம்ப ஆசை இருந்ததால் ஓகே சொல்லிவிட்டாராம்.

கவர்ந்திழுத்த வில்லி
இந்த சீரியல் கிராமத்து கதையாகவும் முதலில் ஒரு பேய் கதை போலதான் எடுக்கப்பட்டது. இதில் வில்லியாக இவர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். சீரியல்களில் வில்லி என்றாலே எல்லாரும் கழுவி கழுவி ஊத்துவாங்க. ஆனா இந்த க்யூட் வில்லிக்கு மட்டும் ரசிகர்கள் வட்டாரம் பெருகியிருக்கிறது. இந்த சீரியலில் இவருடன் வெண்ணிலா கேரக்டரில் நடிக்கும் நட்சத்திரா இவரின் நெருங்கிய தோழி.
Recommended Video

நட்சத்திராவின் தோழி
இவங்க ரெண்டு பேருக்குள்ள எந்த ஒளிவுமறைவும் இருக்காதாம். இவர்களுடைய சீக்ரெட் எல்லாமே நட்சத்ராவுக்கு தான் தெரியுமாம். அந்தளவுக்கு திக்கு பிரண்ட். அது மட்டும் இல்ல ஜீ தமிழில் கலக்கிக் கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியல் பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகிகளாக சபானா மற்றும் ரேஷ்மா இவரின் பெஸ்ட் பிரண்ட். இந்த லாக்டோன் டைம்ல இவங்க பண்ணுற அலம்பலுக்கு அளவே இல்லை.

சேட்டைக்காரிகள்
சீரியல்களில் எல்லாம் புடவையோடு சாந்த சொரூபியாக வரும் இவர்கள் மாடர்ன் டிரஸ் போட்டுகிட்டு லாக்டோன்ல எடுத்த போட்டோஸ்கள் இணையதளங்களில் வைரலாக பரவியது. சைத்ராவுக்கும் அவரது காதலரான ராகேஷ் சர்மாவும் மேமாதம் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் இந்த லாக்டோன் காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு திருமணம் என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

லவ்வுங்க லவ்வு
இணையதளங்களில் இவரது காதலுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறியிருக்கிறார்கள். சீக்கிரமாக திருமணம் நடைபெற இருக்கிறது. சீரியல்களில் வில்லியாக நடிக்கும் இவர் உண்மையில் ரொம்பவும் ஜாலி டைப் கலகலன்னு எப்பவும் பேசிகிட்டு இருப்பாராம். மேலும் டப்ஸ்மாஷ் பண்ணுவதில் கில்லாடியாம் . இவரும் இவரின் பிரண்ட்ஸ்களும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கலாய்ச்சு ஜாலியாக இருக்கிறார்கள்.

வாயாடி ரேஷ்மா.. மேக்கப் செம்பருத்தி
இவங்க குரூப்ல செம்பருத்தி ஷபானா தான் ரொம்பவும் மேக்கப் போடுவாராம். யாரடி நீ மோகினி வெண்ணிலா நல்லா சாப்பிடுவாராம். தலையணைப் பூக்கள் ரேஷ்மா ரொம்ப வாய் பேசுவாங்கலாம்.. வாயாடி புள்ளை போல. அது மட்டும் இல்ல நம்ம வெண்ணிலா தான் க்யூட்டா திருடுவாங்களாம். ஏதாவது பலசரக்குக் கடைக்கு போனா நைசா பழங்களை எடுத்துக்கிட்டு அப்படியே ஒன்றும் தெரியாத பிள்ளை போல வந்துருவாங்க என்று உண்மையை போட்டு உடைத்து இருக்கிறார் சைத்ரா.

செம குஷிதான்
தற்போது மீண்டும் யாரடி நீ மோகினி சீரியல் ஆரம்பித்து விட்டதால் சைத்ராவுக்கு ரொம்ப குஷியாகி விட்டதாம். அப்படியே மனசெல்லாம் ஹேப்பியாகி விட்டதாம். உடம்புக்கும் புத்துணர்ச்சியாக இருக்கிறதாம். இவ்வளவு நாளா வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்தது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது சீக்கிரமாக எல்லாரையும் என்டர்டைன்மென்ட் வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.. வாங்க மேடம் வாங்க.. அதுக்குத்தானே எல்லாப் பேரும் காத்துக் கிடக்கோம்..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications