ஷபானா உடன் பிரச்சனை.. பேசாமல் இருக்க இதுதான் காரணம்! வெளிப்படையாக பேசிய கயல் சீரியல் சைத்ரா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் சைத்ரா ரெட்டி, சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது நெருங்கிய தோழி ஷபானா குறித்து மனம் திறந்து பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் சின்னத்திரையில் "பெஸ்ட் ஃபிரண்ட்ஸ் காங்க்" என்று ரசிகர்கள் கொண்டாடிய நான்கு பேரில் சைத்ரா ரெட்டி, ஷபானா, ரேஷ்மா முரளிதரன் மற்றும் நட்சத்திரா ஆகியோர் மிகவும் நெருக்கமான தோழிகளாக இருந்தனர்.
இந்த நால்வரும் ஒரே நேரத்தில் ஜீ தமிழில் வெவ்வேறு சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், இவர்களுடைய நட்பு சின்னத்திரை ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசுபொருளாக மாறியது. சைத்ரா ரெட்டி மற்றும் நட்சத்திரா இருவரும் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் நடித்தனர். அதே சேனலில் பூவே பூச்சூடவா சீரியலில் ரேஷ்மா முரளிதரன் ஹீரோயினியாக நடித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் செம்பருத்தி சீரியலில் ஷபானாவும் நடித்து வந்தார்.

சீரியல் ஷூட்டிங் மட்டுமல்லாமல், நால்வரும் அடிக்கடி ஒன்றாக போட்டோஷூட் நடத்துவது, க்யூட் வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வது என்று எப்போதும் ரசிகர்களை கவர்ந்து வந்தனர். குறிப்பாக கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் இவர்களுடைய ரீல்ஸ், ஃபன்னி வீடியோக்கள், சிரிப்புடன் கூடிய நட்பு தருணங்கள் சமூக வலைத்தளங்களில் செம ட்ரெண்டாகி வைரலானது.
"தோழிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்" என்று பலரும் இந்த நால்வரின் நட்பை உதாரணமாக சொல்லும் அளவிற்கு, இவர்களுடைய நட்பு ரசிகர்களிடையே ஒரு இன்ஸ்பிரேஷனாக மாறியது.
அந்த காலகட்டத்திற்கு பிறகு, வாழ்க்கையில் அடுத்த கட்டமாக நால்வருக்கும் திருமண வாழ்க்கை தொடங்கியது. முதலில் சைத்ரா ரெட்டிக்கு திருமணம் நடந்தது. அதைத்தொடர்ந்து நட்சத்திரா, ஷபானா, ரேஷ்மா முரளிதரன் என அனைவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகும் ஒருசில காலம் வரை சமூக வலைத்தளங்களில் நால்வரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் சமீப காலமாக அந்த பழைய அளவுக்கு ஒன்றாக சேர்ந்து வீடியோக்கள் அல்லது போட்டோக்கள் பதிவிடுவது இல்லை என்பதையும் ரசிகர்கள் கவனித்து வருகிறார்கள்.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் சைத்ரா ரெட்டி பேசும்போது, "நாங்க இப்போ ஷபானாவிடம் முன்பு போல பேசுறது இல்லை. அதுக்கு சில காரணங்கள் இருக்கு. எங்களுக்கும் ஷபானாவுக்கும் சின்னதா ஒரு மனவருத்தம் ஏற்பட்டிருக்கு. அதனால்தான் இப்போ அவங்க கூட பேசுறது இல்ல. ஆனா அது நிரந்தரமான பிரச்சனை கிடையாது. எங்களுக்குள் என்ன பிரச்சனைன்னு எங்களுக்கே தெரியும். அதனால் அதை சீக்கிரமே சரிசெய்துக்கிட்டு எல்லாரும் மீண்டும் பழைய மாதிரி பேச ஆரம்பிப்போம்" என்று கூறியுள்ளார்.
இந்த பேட்டி வீடியோ இணையத்தில் வெளியானதுமே, ரசிகர்கள் பலரும் "பேசிக்கோங்க, பிரச்சனை சரிசெய்துக்கோங்க", "பழைய நட்பு மீண்டும் வரணும்", "உங்க நட்பு தான் எங்களுக்கு பிடிச்சது" என்று கமெண்ட் செய்து அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள். ஒரு காலத்தில் ரசிகர்களுக்கு 'ஃப்ரெண்ட்ஷிப் கோல்ஸ்' ஆக இருந்த இந்த நால்வரின் நட்பில் ஏற்பட்ட சின்ன இடைவெளி, பலருக்கும் சோகமாகவே தெரிகிறது.
இதற்கிடையில், ஷபானா செம்பருத்தி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், பாதியிலேயே அந்த சீரியலிலிருந்து விலகினார். அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விஜய் டிவியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே இன்னும் அதிகமான பிரபலத்தை பெற்றார்.
தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள போலீஸ் போலீஸ் வெப் சீரிஸில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதேபோல திரைப்படங்களிலும் ஹீரோயினாக நடித்து, சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வரை தனது பயணத்தை விரிவுபடுத்தி வருகிறார்.
மற்றொரு பக்கம், சைத்ரா ரெட்டியும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கதாநாயகியாக நடித்துக் கொண்டு வருகிறார். குடும்ப ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற இந்த சீரியலில், சைத்ராவின் கேரக்டர் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியிருக்கிறது.
ஒரு காலத்தில் எப்போதும் ஒன்றாக இருந்த இந்த நால்வரின் நட்பில் ஏற்பட்ட இந்தச் சின்ன மனவருத்தம் எப்போது சரியாகும்? பழைய நட்பு மீண்டும் திரும்புமா? என்ற கேள்விகளுடன் ரசிகர்கள் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் "ரீயூனியன் வீடியோ வரணும்" என்று பலரும் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications