புருஷன் கூட ஹனிமூன் போகாம.. இப்படி சைக்கிள் ஓட்டி விளையாடறீங்களே சைத்ரா!
சென்னை: கல்யாணம் முடிஞ்ச பிறகு புருஷன் கூட ஹனிமூன் போகாமல் சைத்ரா ரெட்டி அவங்க பிரெண்ட்ஸ் கூட கொடைக்கானலில் செமையான லூட்டி அடித்து தெருவில் சைக்கிள் ஓட்டி என்ஜாய் பண்ணி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்து பொறாமை கொள்ளும் ரசிகர்கள்.. என்னம்மா நீங்க.. இப்படி பண்றீங்களேம்மா என்று கலாய்த்துக் கொண்டுள்ளனர்.
தற்போது சீரியல்களில் வில்லி கேரக்டரில் பின்னிப் பெடல் எடுத்து கொண்டிருக்கும் ஹைலைட் வில்லி சைத்ரா ரெட்டி தான் .இவருக்கு சில வாரங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்தது.

கல்யாணத்திற்குப் பிறகும்
திருமணத்திற்கு பிறகும் கணவருடன் போட்டோ வெளியிடாமல் அவருடைய பிரெண்ட்ஸ்களுடன் போட்டோ வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். பொதுவாக எல்லோரும் கல்யாணம் முடிந்தது என்றால் ஹனிமூன் போய் கொண்டாடுவார்கள்.

கொடைக்கானலில் ஜாலி
ஆனால் இவர்கள் வித்தியாசமாக கொடைக்கானலில் பிரண்டோட சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறாரே என்று தான் பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். சைத்ரா ரெட்டி அறிமுகமானது என்னவோ சீரியல்களில் கதாநாயகி தான் .ஆனால் தற்போது ஜொலித்துக் கொண்டிருப்பது வில்லியாகத்தான். இதுதான் இவரது உயரத்திற்கு அழகுக்கும் கச்சிதமாக பொருந்துகிறது.

யாரடி நீ மோகினி
எனது நடிப்பையும் நன்றாக வெளிப்படுத்த முடிகிறது என்று ரொம்பவே பீல் பண்ணி எனக்கு வில்லி கேரக்டர் தான் வேணும் என்று அடம் பிடித்து இந்த கேரக்டரை வாங்கி கொண்டிருக்கிறாராம். யாரடி நீ மோகினி சீரியலில் முதல்முறையாக வில்லியாக களம் இறங்கியவர் தற்போது பல சீரியல்களிலும் அதே பாணியை கையில் எடுத்திருக்கிறார்.

அழகான வில்லி
தற்போது பூவே பூச்சூடவா என்னும் சீரியலிலும் அதே வில்லத்தனத்தை காட்டும் அழகான வில்லியாக களமிறங்கியிருக்கிறார். இவரது வருகைக்குப் பிறகு இந்த சீரியல் நன்றாகவே சூடுபிடித்துகொண்டிருக்கிறது . சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வரும் இவருக்கு பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராகேஷ் என்பவருடன் திருமணம் முடிந்தது திருமணத்திற்கு பிறகு இவர்கள் மீண்டும் தங்களது பணிகளை தொடர்ந்து வருகிறார்கள்.

தோழிகளுடன் சேட்டை
என்ன தான் பிசியாக இருந்தாலும் தங்களது பழைய ஜாலியான வாழ்க்கையையும் வாழ்ந்து வருகிறார்கள். ஏற்கனவே இவர் திருமணத்திற்கு முன்பே இவரது தோழிகளுடன் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அவர்களுடைய ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்து வந்திருக்கிறார். தற்போதும் அதே போல செய்து வருகிறார். ஆனாலும் இவரது சேட்டைகள் ரசிக்கும் ரசிகர்களும் இவரது அழகை புகழ்ந்து பாடுவது தரவில்லையாம்.

வில்லத்தனம் பிடிக்கும்
இருந்தாலும் மனதிற்குப் பிடித்த வில்லியாக இருப்பது தனி சுகம் தான் என்று இவரும் வில்லத்தனதோடு சில சமயங்களில் சமூக வலைத்தளங்களில் தங்களது என்ஜாய்மென்ட் பண்ணி வீடியோக்களை வெளியிட்டு வருவார்கள். அந்த மாதிரி தற்போது வெளியிட்ட வீடியோஸ்கள் வைரலாக பரவி வருகிறது. இவரது பிரண்ட்ஸ் களான செம்பருத்தி ஷபானா யாரடி நீ மோகினி சீரியலில் வெண்ணிலாவாக நடிக்கும் நட்சத்திரா அதே சீரியலில் நடிக்கும் ஸ்ரீமதி பூவே பூச்சூடவா சீரியலில் நடிக்கும் ரேஷ்மா எல்லோரும் லேடி புள்ளிகளாக வலம் வருவார்கள்.

தோழிகளுடன் சைக்கிள் சவாரி
அடிக்கடி இவர்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்து வெளியிடும் வீடியோக்கள் வேற லெவல் வைரலாக மாறிவிடும். இவர்களுடைய ரசிகர்கள் இவர்களுடைய வீடியோக்களை பார்த்து கொஞ்சி குலாவி வருவார்கள் .தற்போது கொடைக்கானல் வீடியோவிலும் அந்த மாதிரிதான் சைக்கிளில் கலக்கி இருக்கிறார்கள். அதுவும் வெண்ணிலாவின் பாவாடை சைக்கிளுக்குள் மாட்டிவிட அதை லாவகமாக சைத்ரா எடுத்துவிட்டது பெரிய கிக்காக இருந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications