சந்திரகுமாரிக்கு கெட் அவுட்டு ...தமிழ் செல்விக்கு கட்டவுட்டு...!
சென்னை: சன் டிவியில் கடந்த சனிக்கிழமை ரடான் தயாரிப்பான சந்திரகுமாரி சீரியல் சுபம் போட்டு முடிஞ்சுருச்சு...ஏதோ அவசர கதியில் முடிந்தது போல இல்லாமல் கடந்த ஒரு மாதமாகவே பிளான் செய்தது போல சாதாரணமாகவே முடித்துள்ளார்கள்.
சன் டிவியில் ராதிகாவை இனி பார்க்க முடியுமோ இல்லை பார்க்க முடியாதோ... என்றாலும் யார் பிஸினஸும் இத்துடன் முடிந்து போகப் போவதில்லை. அவங்கவங்க அவங்கவங்க வேலையை பார்க்க வேண்டியதுதான்.
ராதிகா ரசிகர்கள் இது குறித்து கவலைப்பட்டு கொண்டு இருக்க கூடாது. ஏறக்குறைய பதினைஞ்சு இருபது வருஷங்களுக்கு மேல சன் டிவியில் கோலோச்சிட்டுத்தான் ராதிகா இன்னிக்கு சந்திரகுமாரி சீரியலை முடிச்சு இருக்கார்.

இனி போதும் பழையவர்கள்
இனி போதும் பழையவர்கள். .புதியவர்களுக்கு கொஞ்சம் வழி விடலாம் என்கிற முடிவுக்கு வந்துள்ள சன் டிவி முக்கியமான விகடன் டெலிவிஸ்டாஸ், திருமுருகன் சீரியல் ஸ்லாட்களில் மட்டும் தலையிடுவது இல்லையாம். மற்ற எல்லா ஸ்லாட்களிலும் சன் டிவியின் பங்களிப்பும் இருககிறது.

வருகிறாள் தமிழ்செல்வி
இன்று முதல் சனிக்கிழமை வரை வாரம் தோறும் மாலை 6:30 மணிக்கு இனி தமிழ்செல்வி சீரியல் மூலம் வரப்போகிறாள். இதற்கான ப்ரோமோவுக்கே அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள்.நடிகை மீனா இதுவரை நான்கு வகையான ப்ரோமோக்களில் தமிழ்செல்வி சீரியல் பற்றிய பெருமைகளை எடுத்து சொல்லி வருகிறாரர்.

கதை கூட்டு குடும்பம் பற்றினதா?
தமிழ்செல்வியாக நடிக்கும் பெண் நல்ல அழகாக சிரித்த முகத்துடன் இருக்கிறார். செஸ் விளையாடுவது... டிராக்டர் ஓட்டுவது... வயல் வெளியில் ஓடுவது..தாண்டி விளையாடுவது என்று தமிழ்செல்வியை நன்றாக காமிச்சு இருக்காங்க...

தமிழ்செல்வி அழகு தமிழ் பெயர்
சீரியலுக்கு தமிழ்செல்வி என்று அழகாக தமிழில் பெயர் வைத்து இருப்பது, மிகவும் எதிர்பாராப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீரியல் யார் தயாரிப்பு, இதில் சன் டிவி தயாரிப்பு பங்களிப்பு உள்ளதா என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications