Chandralekha Serial: லவ்வர்ஸ்க்கு இது யூனிவர்சல் கோடா?.. அப்போ தப்பான காதலுக்கு?
சென்னை: சன் டிவியின் சந்திரலேகா சீரியல் போலவே அந்த டிவியின் அக்னி நட்சத்திரம் சீரியலும் இருக்கிறது. சந்திரலேகாவில் நாத்தனார், அண்ணிக்குள் பெண் குழந்தைகள் மாறிப் போனது 5 வருடங்களுக்குப் பிறகுதான் பிள்ளைகளுக்கு தெரியுது.
அக்னி நட்சத்திரம் சீரியலில் நண்பனின் குழந்தை இறந்து போக, இவனுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறக்க அதில் ஒரு குழந்தையை தனது மனைவிக்கு கூட தெரியாமல் கொடுத்து விடுகிறான்.
இப்படி இரு பெண்களில் தங்களுக்கு முன்னால் அம்மா, அப்பான்னு இருந்தும் அறியாமல் வேறு வேறு வீட்டில் வளர்கிறார்கள். இப்படி சின்ன சின்ன மாற்றத்தில் இரண்டு சீரியல்கள் போகின்றன.

கவனிக்குமா சன் டிவி
இப்படி ஒரே கதையில் இரண்டு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் ஒரு காமெடி என்னவென்றால் சந்திர லேகா சீரியலிலும் ஒருத்தி காதலிப்பவனையே இன்னொருத்தியும் காதலிக்கிறாள். இப்போது அக்கினி நட்சத்திரம் சீரியலிலும் அப்படித்தான் ஒருத்தி காதலிப்பவனையே இன்னொருத்தியும் காதலிக்கிறாள்.
இப்போதானே களத்துல இறங்கி இருக்கோம்..இனி என்னென்ன சீரியல் கதை ஒன்றாக இருக்கிறது என்று அவ்வப்போது சொல்லத்தான் போகிறோம்.

சரி விடுங்க
சந்திரலேகா சீரியலில் சந்திரா ரொம்ப நல்ல பொண்ணு. லேகா பணக்கார வீட்டில் வளரும் திமிர் பிடித்த பொண்ணு. இவள் சந்திரா சபரி இருவரும் காதலிப்பதை பொறுத்துக்க முடியாமல், சபரியை சந்திராவின் நல்ல குணத்தை உபயோகிச்சு கல்யாணமும் செய்துக்கறா. சரி, ஆசைப்பட்டபடி கல்யாணம்தான் பண்ணிகிட்டாளே என்று பார்த்தால், புருஷனை தன்னை தொட விடாதபடி அடிமையாக நடத்துகிறாள். எப்போதும் டார்ச்சர்.

வீட்டு மாப்பிள்ளை
வீட்டோடு மாப்பிள்ளையாக சபரியை வச்சுக்கிட்டிரு, லேகா அம்மாவுடன் சேர்ந்துகொண்டு புருஷனையும், மாமியாரையும் பாடாய் படுத்துகிறாள். இவளுக்கு ஆறுதலாக ஒரு தோழி கிடைக்க, அவளுடன் அடிக்கடி பேசி, ஆறுதல் கொள்கிறான். ஆனால்,இவன் பேசும் தோரணையில் தோழி இவன் மீது காதல் கொள்கிறாள்.

இல்லை நீ பேசு
சபரி குளிக்கப் போக, அந்த பெண் தோழி போன் செய்கிறாள். கீழே உட்கார்ந்து இருந்த லேகாவுக்கு எரிச்சலாக இருக்குது. அத்தை உங்க புள்ளை போன் அடிச்சுக்கிட்டே இருக்குது..அவரை எடுத்து பேச சொல்லுங்கன்னு கத்துகிறாள்.அவன் குளிச்சுகிட்டு இருக்கான்மான்னு சொல்லிட்டு போயிடறாங்க. சரி, நாமாவது போனை எடுக்கலாம்னு எடுத்தால், அந்த பக்கம் பேச்சே காணோம்.
இவளும் ஹலோ சொல்லலை, அவளும் பேசலை. பொறுமையா இருந்த லேகா, ஏண்டி இப்படி ஒரு யுனிவர்சல் கோடா உங்களுக்கு? யாரடி நீ? இன்னொருத்தி புருஷன் கூட கள்ள காதல் உனக்கு இந்த கோட் வேறயா?

கேளுங்க அத்தை
அத்தை நான் கேட்டல் உங்க புள்ளை எகிறுவார்.நீங்களே அந்த தோழி யாருன்னு கேளுங்க. நான் கேட்டால் இதுதான் சாக்குன்னு காட்டு கத்தல் கத்துவார். பொண்டாட்டிக்கு கேட்க உரிமை இருக்கற மாதிரி பெத்த அம்மாவுக்கும் புள்ளை ஒழுக்கமா இருக்கணும்னு எண்ணமிருக்கும் இல்லை.நீங்க அவர் சட்டையைப் பிடிச்சு கேளுங்கன்னு கத்துகிறாள்.
லவ்வர்ஸுக்கு ஓகே இந்த கோட்.. ஆனால், தப்பான லவ்வர்ஸுக்கு வேணாமே!
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications