Chandralekha serial: வனிதா விஜயகுமார் நடிக்கும் சீரியலில் நிஜமா இது நடந்துச்சுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தைக்கு பாட்டி மாதிரி வயசுல இருக்கறவங்க ஒருத்தர் குழந்தையின் சாப்பாட்டில் விஷம் கலந்துடறாங்க. இது வனிதா விஜயகுமார் நடிக்கும் தொலைக்காட்சித் தொடரில் நடந்துச்சுங்க.

சன் டிவியின் சந்திரலேகா சீரியலில் வனிதா விஜயகுமார் வனிதாவாவே நடிக்கறாங்க. அதாவது நடிகையாக..அதோடு சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் பெண்ணாகவும் இருக்காங்க.

சந்திராவின் புருஷன் தன்னை ஏமாத்தி கல்யாணம் செய்துக்கறேன்னு கையில் குழந்தையை கொடுத்துட்டதா ஒரு பெண் வனிதாவின் ஆதரவைத் தேடி வர்றா.

சந்திரா பானு

சந்திரா பானு

சந்திராவின் புருஷன் சஞ்சய்க்குத்தான் இந்த குழந்தை பிறந்தது என்று பானு ஆதாரத்துடன் சொல்ல, வனிதாவும் அந்த பெண்ணை சந்திராவின் வீட்டுக்கு அழைச்சுட்டு போறாங்க. சஞ்சய் இந்த பெண்ணை எனக்குத் தெரியவே தெரியாதுன்னு சொல்லிவிட எதிரான ஆதாரம் இருந்தா நம்பறேன்னு சொல்றாங்க வனிதா.

அவகாசம் 10 நாட்கள்

அவகாசம் 10 நாட்கள்

சஞ்சய் பானுவை காதலிக்கலை, அவளுக்கு குழந்தையும் கொடுக்கலை என்பதை நிரூபிக்க 10 நாட்கள் அவகாசம் வேணும்னு சந்திரா வணிதாவிடம் கேட்கிறாள்.வனிதாவும் அதுவரை பானு உங்க வீட்டில்தான் இருப்பா. பானுவுக்கோ ,அல்லது பானு குழந்தைக்கோ எதாவது ஆபத்து வந்தால் சந்திராதான் அதுக்கு பொறுப்புன்னு சொல்லிட்டு போயிடறாங்க.

அத்தை சஞ்சய்

அத்தை சஞ்சய்

புருஷனை இழந்த அத்தை தனது பெண்ணை சஞ்சய்க்கு எப்படியாவது இரண்டாவது தாரமா கல்யாணம் பண்ணி வச்சுடணும்.சந்திராவை வீட்டை விட்டு விரட்டிடணும் சதி செய்துகிட்டு இருக்காங்க அத்தை. ஆனால், இந்த சதிகளை அத்தை பெத்த பெண்ணே சந்திராவிடம் சொல்லி முறியடிச்சுடறா.

வயதாகிய பின்னும்

வயதாகிய பின்னும்

வனிதா சொல்லிவிட்டு போன ஒரு வார்த்தை அத்தைக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. அதாவது பானுவுக்கோ, அவளது குழந்தைக்கோ ஆபத்து என்றால் நீதான் மாட்டுவேன்னு சொன்னது. உடனே அத்தை குழந்தைக்கு ஊட்டும் சாப்பாட்டில் விஷம் கலந்து பானுகிட்டே கொடுத்து ஊட்டிவிட சொல்றாங்க. அப்போதுதான் சந்திரா மாட்டுவாளாம்.. என்ன கற்பனை பாருங்க..

இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்தால் ஐயோன்னு கத்தணும் போல இருக்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+